ஏலியன்கள் 2022 இல் பூமியை தாக்குமா?... அதிர வைத்த பார்வையற்ற உளவியலாளர்
2022 இல் உலகம் பல ஆபத்துகளை சந்திக்கப் போகிறது என்று பல்கேரிய நாட்டு சைக்கிக் ஒருவர் கணித்துள்ளார்.
பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா என்ற ஒரு பார்வையற்ற உளவியலாளர். 2022ஆம் ஆண்டு வைரஸ் தாக்குதல் சுனாமி மற்றும் ஏலியன் தாக்குதல் பற்றிய கணிப்புகளை வெளியிட்டுள்ளதாக பல அறிக்கைகள் வெளிவந்துள்ளன.
அறிவியல் பெருமளவு வளர்ச்சி அடைந்த போதிலும் இயற்கையின் எத்தனையோ விந்தைகளுக்கு இன்று வரை பதில் இல்லை.
அதிலும் வானில் தோன்றுவதாக கூறப்படும் பறக்கும் தட்டுகள், ஏலியன்கள் போன்ற சில விந்தைகள் மனிதர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளன.
ஏலியன்களைப் பற்றிய பேச்சு யாருக்குத்தான் சுவாரஸ்யமாக இருக்காது?
மர்மங்களை அலசுவதில் ஆராச்சியாளர்களை விடவும் நமக்கு சற்று ஆர்வம் அதிகமாகவே உண்டு.
இந்த நிலையில் பாபா வாங்கா ஏலியன் அட்டாக் அதாவது பூமியில் வேற்றுகிரகவாசிகளின் தாக்குதல் இந்த ஆண்டு 2022ஆம் ஆண்டு முதல் தொடங்கும் என்று கணித்துள்ளார்.
அப்படி நடந்தால் மனிதர்களிள் நிலை என்ன ஆகும் என்று தெரிய வில்லை. ஒரு சிறிய கோள் மூலம் பூமியில் உள்ளவர்களைப் பற்றிய தேடுதல் வேட்டை நடத்தப்படும் என்றும் அவர் கணித்துள்ளார்.
இவரின் கணிப்புகள் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்று தெரிய வில்லை. எனினும் அது நடந்தால் பூமியை எலியன்ஸ் தன் வசப்படுத்தி விடும் நாளும் மிக தொலைவில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
பூமியின் வளங்கள் ஏற்கெனவே குறைந்து கொண்டிருக்கின்றன. இங்கு வாழ்பவர்களுக்கே பற்றாக்குறை ஏற்பட்டுக்கொண்டிருக்க இப்படி ஒரு நிலையில் ஏலியன் தாக்குதல் எப்படி இருக்கும் என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள்.
ஏலியன்களுக்கு பூமியில் வாழ முடியுமா அல்லது வாழ்ந்திருக்கின்றதா?
எம் மூதாதையர்களின் பல குறிப்புகள் எலியன் இருந்ததற்காக ஆதாரத்தையே காட்டுகின்றது. 14,000 மற்றும் 400 கிமு காலக்கடத்தின் போது ஜப்பானில் செதுக்கப்பட்ட சிறிய ரக சிலைகள் தன் டோகு. சுமார் 10 சிமீ முதல் 30சிமீ வரை உயரமாக இருக்கும் டோகு களிமண் மூலம் வடிவமைக்கப்பட்டு பார்க்க மனிதர்களை போன்று இருக்கும். இந்த சிலைகள் ஏன் வடிக்கப்பட்டன என்பதற்கான காரணங்கள் தொலைந்து விட்டன. இச்சிலைகள் மனித உருவம் கொண்டவைகள் ஏதோ மண்டை ஓடுகளை அணிந்து கொண்டிருப்பதால் இவை விண்வெளி ஆடையாகவும் இருக்கலாம், என்றும் இவை ஏலியன்களை பார்த்த பின் வடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
அதேபோல பெரு நாட்டின் நாஸ்கா பாலைவனத்தில் காணப்படும் நாஸ்கா கோடுகள் சுமார் 500 கிமு ஆண்டுகளில் வரையப்பட்டதாக அறியப்படுகின்றது.
இந்த கோடுகளின் அளவு மற்றும் வடிவம் பல்வேறு அர்த்தங்களை கொண்டதாக அறியப்படுவதோடு இவை நாஸ்கா கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது.
தரையில் இருந்து முழுமையாக பார்க்க முடியாத இந்த கோடுகள் வானத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே தெளிவாக தெரியும். இதன் காரணமாக இவை ஏலியன் வாகனங்கள் பூமியில் தரையிறங்க வரையப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதினார்கள்.
இது போன்ற பல ஆதாரங்களை கூறலாம். புராண காலங்கள் முதல் இன்று வரை இலங்கையில் உள்ள சிகிரியா குன்று மர்மம் நிறைந்ததாகவே பார்க்கப்படுகின்றது.
அந்த பகுதியில் ஏலியன்கள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகின்றது. சிகிரியா மலைத்தொடர் மட்டும் இல்லாமல் அதன் பகுதியில் இரவு நேரங்களில் பறக்கும் தட்டுகளில் அப்பகுதியை சுற்றிவருவதாகவும், அங்கு ஒரு சில ஓசைகள் கேட்பதாகவும் கூறப்படுகின்றது.
தமிழர்களுக்கும் ஏலியன்களுக்கும் நல்ல உறவு காணப்பட்டதாக வாய்வழி கதைகள் உண்டு.
இப்படியான கதைகளும் செய்திகளையும் நாம் கேட்டிருக்கும் நேரத்தில் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா எலியன்கள் தாக்கும் என்று பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கின்றார்.