beauty: முகத்தை பொலிவாக்கும் பாசிபயறு Face pack- 2 முறை போட்டால் போதுமாம்..
பொது இடங்களுக்கு அதிகமாக செல்பவர்களின் முகம் எப்போதும் கருமையாகவே இருக்கும்.
இதனை எப்படி சரிச் செய்யலாம் என பலரும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
இது போன்று கால நிலை மாற்றத்தால் சில இடங்களில் வெயில் அளவுக்கு அதிகமாக உள்ளது.
இந்த சூழலில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நிறைய பழங்கள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அந்த வகையில், முக கருமையை போக்குவதற்கு எப்படியான Facr pack- ஐ பயன்படுத்தலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாசி பயிறு மாவு
- ஆரஞ்சு பழச் சாறு
- தேங்காய் எண்ணெய்
Face pack தயாரிப்பு முறை
பாசி பயிறு மாவு, ஆரஞ்சு பழச் சாறு, தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் தேவையான அளவில் எடுத்து, ஒரு பவுலில் போட வேண்டும்.
பின்னர், இவை மூன்றையும் நன்றாக கலந்து விட்டால் பசை போன்ற பதத்திற்கு வரும். அதனை முகத்திற்கு அப்ளை செய்யலாம். இந்த பேக்குடன் சுமாராக 20 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும்.
அதன் பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் கருமை நீங்கி, முகம் பொலிவாக இருக்கும். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.
முக்கிய குறிப்பு
இந்த பேக்கால் ஏதாவது ஒவ்வாமை இருந்தால் உரிய மருத்துவரிடம் ஆலோசனை எடுத்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |