இந்த அறிகுறிகள் இருந்தா அலட்சியப்படுத்தாதீங்க... நீரிழிவு அபாயம் நிச்சயம்
இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் இதன் ஆபத்து அதிகரித்து வருகிறது. தற்போது நாட்டில் 10 கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது மட்டுமின்றி கோடிக்கணக்கான மக்கள் ஆபத்தில் உள்ளனர். இந்த நோயைத் தவிர்க்க, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். உடலை நீரிழிவு நோய் தாக்கும் போது நம் உடலில் சில அறிகுறிகள் தோன்றும்.
அவற்றை சரியான நேரத்தில் கண்டறிவதன் மூலம், உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை தவிர்க்கலாம். கொப்புளங்கள், தொற்றுகள் அல்லது நாள்பட்ட வழக்கமான தோல் பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது.
நீரிழிவு அறிகுறிகள்
உடலில் நீரிழிவு நோய் ஏற்பட்டால் எல்லா பாகங்களையும் பாதிக்கிறது. இருப்பினும், உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதை தோலில் தோன்றும் சில அறிகுறிகள் வைத்து இலகுவில் அடையாளம் காணலாம்.
தோல் பிரச்சினைகள், பாக்டீரியா, பூஞ்சை தொற்று, அரிப்பு, கொப்புளங்கள் போன்றவை டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் பொதுவான அறிகுறி ஆகும். உங்கள் உடலில் கருப்பு அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்.
இந்த திட்டுகள் சிறியதாக தொடங்கி, பருக்கள் போல தோற்றமளிக்க ஆரம்பித்து திட்டுகளாக மாறும். இவை இரத்த நாளங்களை அதிகமாக பாதித்து பளபளப்பான, பீங்கான் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இவை தோலில் அரிப்பு மற்றும் வலியை உண்டாக்கும்.
இது முக்கியமான பாதிப்பாக இல்லை என்றாலும், உடல்நல சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு முன்பு கட்டுக்குள் கொண்டு வர முடியும். தோல் பாதிப்பு கழுத்து, அக்குள் அல்லது இடுப்பைச் சுற்றி கருமையான திட்டுகள் இருந்தால் உங்கள் இரத்தத்தில் இன்சுலின் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.
இது பெரும்பாலும் அதிக எடை கொண்டவர்களுக்கு ஏற்படுகிறது. உடலில் நீரழிவு இருந்தால் தோலில், குறிப்பாக கைகள் அல்லது கால்கள் அல்லது இரண்டிலும் கொப்புளங்களை காணலாம். இந்த கொப்புளங்கள் தீக்காயங்கள் போன்ற தோற்றத்தில் இருக்கும். ஆனால் வலி இருக்காது.
இவற்றை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். கிரானுலோமா வளையம் என்பது ஒரு தோல் நிலையாகும், இது சொறி அல்லது புடைப்புகளை தோலில் ஏற்படுத்துகிறது, இது அதிகமாக இளம் வயதினரை அவர்களின் கைகள் மற்றும் கால்களில் பாதிக்கிறது.
மற்றொரு அறிகுறி கால்களின் கீழ் பகுதியை சிவப்பு-பழுப்பு நிற திட்டுகள் ஏற்படும். இது இரத்த நாள அழற்சியுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. பொதுவாக வகை 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |