பழைய பவர் கேபிள்கள் இருக்கா? உடனே தூக்கி குப்பையில் வீசுங்க... வெடித்து சிதறும் ஆபத்து இருக்கிறது
உணவு பொருட்களை போலவே நாம் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் காலாவதியாகும் திகதி உள்ளது. நம்மில் பலருக்கு இது குறித்த தெளிவு இல்லாமல் இருக்கின்றது.
நாம் பயன்படுத்து அனைத்து பொருட்களுக்கும் காலாவதி நாள் இருக்கும். அதனை நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும். சில பொருட்களில் காலாவதி நாட்கள் கடந்தும் அதை நாம் வீட்டில் வைத்திருப்போம்.
அது ஆபத்து, குறிப்பாக நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் முதல் பழைய சார்ஜர்கள் வரை அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களையும் வீசுவது கிடையாது.
இது போன்ற பொருட்கள் வீட்டில் வைத்திருந்தால் உங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
அப்படி நாம் தூக்கிய எறியவேண்டிய எலக்ட்ரானிக் பொருட்கள் என்னென்ன என்று விரிவாக பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்
இன்று ஸ்மார்ட்போன் இல்லாத வீடுகளே இல்லை. அதிலும் ஸ்மார்ட்போன் பிரியர்கள் அடிக்கடி தங்களின் போன்களை மாற்றி கொண்டே இருப்பார்கள்.
வீட்டில் இருக்கும் பழைய ஸ்மார்ட்போன்களை சேர்த்து வைத்து கொள்ளும் பழக்கமும் சிலருக்கு உண்டு.
பழைய போன்களில் இருக்கும் அயன் பேட்டரிகள் திடீரென வெடிக்கக்கூடியவை. இதனால் வீட்டில் இருப்பவர்களின் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படும். இதனால் பழைய ஸ்மார்ட்போன்கள் இருந்தால் உடனடியாக வீட்டில் இருந்து எறிந்துவிடவும்.
ஸ்மார்ட்போன் சார்ஜர்கள், இயர்போன்கள், ஸ்பீக்கர்கள், ஹார்ட் டிரைவ்கள் ஆகியன பழுதாகி விட்டாலும் நீங்கள் தூக்கி வீச வேண்டியது அவசியம்.
ரவுட்டர்கள்
நாளுக்கு நாள் நவீன சந்தைகளில் அதி நவீன ரவுட்டவர்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
பழைய ரவுட்டர்களை இலகுவான முறையில் ஹேக் செய்ய முடியும். பழைய ரவுட்டர்கள் சைபர் க்ரைம்களுக்கான வெளிப்படையான அழைப்பு.
பழைய ரவுட்டர்களால் அதிநவீன ஹேக்கிங் முறைகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்க முடியாது. எனவே ரவுட்டர்கள் பழையதாகி விட்டால் உடனே அகற்றி விடுங்கள்.
பவர் கேபிள்கள்
பவர் கேபிள்கள் காலம் போக போக அதன் இன்சுலேஷன் பண்புகளை இழக்கும்.
இதனால், ஷாக் மற்றும் தீ விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.
எனவே பழைய பவர் கேபிள்களை உடனடியாக அகற்றி விடுங்கள்.
பல்புகள்
பழைய பல்புகள் மற்றும் டியூப் லைட்களில் டங்ஸ்டன் இழைகள், இரசாயனங்கள் மற்றும் வாயுக்கள் உள்ளன. அவை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.
இதனால் வீட்டில் இருப்பவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும்.
எனவே பழைய பல்புகளை உடனே வீசி விடுங்கள்.
முக்கிய குறிப்பு
இவை தவிர எந்த எலக்ட்ரானிக் பொருட்களாக இருந்தாலும் பழுதடைந்து விட்டால் உடனே அவற்றை தூக்கி எறிந்து விடுங்கள்.
இதனால் வீட்டில் இருப்பவர்களின் உயிருக்கு ஆபத்து... எந்த நேரத்தில் எந்த எலக்ட்ரானிக் பொருட்கள் வெடிக்கும் என்பது தெரியாது அல்லவா?