குடிப்பழக்கத்தில் இருந்து வெளி வரமுடியாமல் தவிக்கிறீர்களா? மாற்றியோசித்து வெற்றி கண்ட சீனர்!
குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்பதை அனைவரும் அறிந்த ஒன்று தான்.
அப்படி இருந்தும் இதனை நிறுத்திக் கொள்வதற்கு பெரும்பாலானோர் எவ்வளவு முயற்சித்தும் அதிலிருந்து விடுபட முடியாமல் போய் இருப்பீர்கள் ஆனால் இதெல்லாம் சரிப்பட்டு வராது நீங்கள் இதை பயன்படுத்துங்கள் என அறிவு பூர்வமாக சிந்தித்து ஒரு விடயத்தைக் கண்டுப்பிடித்துள்ளார்கள்.
மதுவிற்கு அதிகம் பிரியமான சீனாவைச் சேர்ந்த ஒருவர் தனக்கு 36 வயதான நிலையில் மருத்துவமனைக்குச் சென்று தனது உடலில் சிப் ஒன்றைப் பொருத்தியிருக்கிறார்.
இதனைப் பொருத்தியதன் பின் மது பழக்கத்தில் இருந்து வெளிவரமுடியும் என கூறப்படுகிறது.
தினமும் அரை லீட்டர் சீன மதுபானம் அருந்தும் பழக்கம் அவருக்கு இருந்ததால் வன்முறையில் ஈடுபட்டார்.
காலை உணவுக்கு முன் மது அருந்துவதும், பிறகு வேலை செய்யும் இடத்திலும், மாலை வேளையில் அவர் உடல்நிலை சரியில்லாமல் போகும் வரையிலும் மது அருந்துவது அவரது தினசரி வழக்கத்தில் அடங்கும்.