முதல்வர் விஜயை சந்தித்த இயக்குநர் ஏ.எல். விஜய் : 13 வருடங்களின் பின் வைரலான “Time To Lead” சர்ச்சை வாசகம்!
சில பரிசுககள் பார்ப்பதற்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் அதன் பின்னணி தெரிந்தால் மட்டுமே அதன் முக்கியத்துவம் பற்றி புரியும். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இயக்குநர் ஏ.எல். விஜய் மற்றும் முதலமைச்சர் விஜய் சந்திப்பின் போது ஏ.எல். விஜய் முதல்வருக்கு கொடுத்துள்ள பரிசும் அப்படிப்படதென்று தான்.
முதல்வருக்கு வழங்கிய பரிசு
இந்த சந்திப்பில், ‘தலைவா’ திரைப்படத்தின் “Time To Lead” என்ற போஸ்டரை பிரேம் செய்து, இயக்குநர் ஏ.எல். விஜய் முதலமைச்சர் விஜய்க்கு பரிசாக வழங்கியுள்ளார்.

இந்த ஒரு புகைப்படத்தையே ரசிகர்கள் சாதாரண பரிசாக அல்லாமல், உணர்வுபூர்வமான தருணமாகவும், “13 வருட காத்திருப்புக்கு கிடைத்த பதில்” என்றும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
காரணம், 2013-ல் வெளியான ‘தலைவா’ படம் தொடர்பான சர்ச்சைகள் அப்போது பெரும் பேசுபொருளாக இருந்தது. குறிப்பாக “Time To Lead” என்ற வாசகம் அரசியல் சாயல் கொண்டதாக கருதப்பட்டு விவாதத்தை ஏற்படுத்தியது.இதனால் திரைப்பட வெளியீடு பல சிக்கல்களை சந்தித்தது.

பின்னர் படம் சில மாற்றங்களுடன் வெளியானது; அதில் அந்த வாசகமும் நீக்கப்பட்டது. இப்போது அதே “Time To Lead” வாசகம் பிரேம் செய்யப்பட்டு, தற்போதைய அரசியல் சூழலில் இருக்கும் விஜய்க்கு வழங்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பல்வேறு அர்த்தங்களில் பார்க்கப்படுகிறது.
“அன்று சர்ச்சையாக இருந்த வார்த்தை இன்று ஒரு நினைவுப் பரிசாக மாறியுள்ளது” என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |