இயக்குனர் விஜய்யின் குழந்தையைப் பார்த்ததுண்டா? தீயாய் பரவும் புகைப்படம்
அஜித் நடித்த ’கிரீடம்’ விஜய் நடித்த ’தலைவா’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் கடந்த 2019ஆம் ஆண்டு டாக்டர் ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்தார்.
இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே இந்த நிலையில் தற்போது இயக்குனர் விஜய் தனது மனைவி மகனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இயக்குனர் விஜய் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்து உள்ளார் என்பதும் இந்த படம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது என்பதும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைவி’ படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத்தும், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
