மருமகள் குடும்பத்தினர் கிளம்பும் போது நெப்போலியன் செய்த செயல்.. எமோஷனலாக கூறிய அக்கா
நெப்போலியன் தனது மருமகள் அக்ஷயாவின் குடும்பத்தினர் ஜப்பானிலிருந்து கிளம்பும்போது செய்த செயல் குறித்து, அக்ஷயாவின் அக்கா கூறியுள்ளார்.
நடிகர் நெப்போலியன்
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் சில வாரங்களுக்கு முன்பு கோலாகலமாக ஜப்பானில் நடைபெற்றது.
தற்போது 25 வயதாகும் தனுஷிற்கு சதை தசைவு நோய் உள்ளதால் அவரால் நடக்க முடியாமல் இருக்கும் நிலையில், தந்தையின் ஐடி நிறுவனத்தை கவனித்து வருகின்றார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த செவிலியர் பட்டதாரி பெண் ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்த நிலையில், இவர்களின் திருமணத்தை நெப்போலியன் கோலாகலமாக ஏற்பாடு செய்து நடத்தி வைத்துள்ளார்.
இந்த திருமணத்தில் நடிகர் சரத்குமார், குஷ்பூ, மீனா, சுஹாசினி, கார்த்தி, பாண்டியராஜன், ராதிகா என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பல எதிர்மறையான கருத்துக்கள் இணையத்தில் வலம் வரும் நிலையில், இதுகுறித்து அக்ஷயாவின் அக்காவும் பேசியுள்ளார்.
அக்கா கூறிய பதில்
திருமணத்திற்கு முன்பு நெப்போலியன் மனைவி சுதா அக்ஷயாவின் குடும்பத்தினர் அனைவரிடமும் தனித்தனியாக போன் செய்து திருமணத்திற்கு சம்மதமா என்று கேட்டுள்ளார்.
பின்பு அக்ஷயாவின் அக்காவிடம் உங்களது கணவருக்கு இந்த திருமணத்தில் சம்மதமா? எதாவது சொல்வாரா? என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவரது அக்கா நாங்கள் அக்ஷயாவில் விருப்பத்திற்கு பிறகு எல்லோரும் சம்மதம் சொன்னோம். எங்க அப்பா கூட பிறந்தவங்க 11 பேர் எல்லோரும் பெரிய அளவில் பேசிக்கொள்வது கிடையாது.
ஜப்பானுக்கு வந்த நேரில் மாப்பிள்ளையைப் பார்த்தோம். 20 நாட்கள் எல்லோரும் ஒரே குடும்பமாகவே பழகினோம். இவ்வளவு தூரத்தில் அக்ஷயாவினை விட்டுச் செல்வது கஷ்டமாக இருந்தாலும், நெப்போலியன் சார் அக்ஷயாவினை நன்றாக பார்த்துக் கொள்வார் என்று கூறியுள்ளார்.
மேலும் நாங்க எங்க குடும்பத்தோடு அக்ஷயா வீட்டிலிருந்து ஊருக்கு கிளம்பும்போது அக்ஷயா கண்கலங்கி அழுதார். அப்போது நெப்போலியன் தான் அக்ஷயாவிற்கு ஆறுதல் சொன்னார்.
எங்களிடமும் நாங்கள் எங்க பொண்ணு போல பார்த்துக் கொள்வோம் என்று சொல்லி இருக்கிறார். அதுபோல திருமணத்தில் நெப்போலியன் சார் குடும்பத்தில் எல்லோருமே எங்களிடம் பல வருட பழக்கம் போல நடந்து கொண்டார்கள். அக்ஷயா மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்களோ அதே மரியாதையும் பாசமும் எங்களிடமும் காட்டினார்கள் என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |