அட்சய திருதியையில் தங்கம் வாங்க முடியாதவர்கள் கண்டிப்பாக இதை செய்ங்க... லட்சுமியின் ஆசி கிடைக்கும்!
செல்வச் செழிப்பை அள்ளித் தரும் தினமான அட்சய திருதியை இந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதியான இன்று புதன்கிழமை கொண்டாடப்படுகின்றது.
அட்சய திருதியை நாளில் நாம் வாங்கும் பொருட்கள் அந்த ஆண்டு ழுழுவதும் சிறந்த பெருக்கத்தை கொடுக்கும் என சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.
சித்திரை மாதத்தில் சுக்ல பட்சம் 14 வது நாளில் அட்சய திரிதியை கொண்டாடப்படுகின்றது. அட்சயம் என்றால் எடுக்க எடுக்க குறையாத பொருள் என்று அர்த்தம்.
அட்சய திருதியை அன்று என்ன பொருட்கள் வாங்கினாலும் பெருகும் என்று சொல்லப்படுகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் இந்த நாளில் தங்கம் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள்.
அப்படி தங்கம் வாங்க முடியாதவர்கள் எந்த பொருட்கள் வாங்கினால் மங்களம் உண்டாகும் என்பது குறித்தும் இந்த நாளில் எதுவும் வாங்க முடியாதவர்கள் என்ன செய்யலாம் எனவும் இந்த பதிவில் பார்க்கலாம்.
தங்கத்துக்கு பதில் என்ன வாங்கலாம்?
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது அதிக சிறப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்றாலும் தங்கத்தின் விலை மிகவும் உயர்வாக இருப்பதால், எல்லோராலும் தங்கம் வாங்குவது இயலாத காரியம்.
அதற்கு மாற்றீடாக இந்த நல்ல நாளில், வளத்தின் அடையாளமான பருப்பு வகைகள், பசுமை மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளமான கீரை மற்றும் காய்கறிகள், செல்வத்தின் சின்னங்களான தானியங்கள் (அரிசி, பார்லி), மண்குடம், சங்கு, ஸ்ரீயந்திரம், புனிதப்பொருளான நெய் ஆகியவற்றை தங்கத்திற்கு பதிலாக வாங்குவதும் ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
வாழ்வின் முன்னேற்றத்துக்கு உதவக்கூடிய புத்தகங்கள் அல்லது சமையல் பாத்திரங்கள், பூஜை பொருட்கள் வாங்குவதும் மங்களகரமானதாக கருதப்படுகின்றது. அதுவும் வாங்க முடியாதவர்கள் உப்பு அல்லது மஞ்சள் வாங்குதும் தங்கத்துக்கு நிகரான அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கும்.
மேலும் இந்த நாளில் உங்களால் முடிந்தவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை முழுமையா பெற உதவும்.
எதுவும் வாங்க முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் ஒரு வேலை உணவையாவது இல்லாதவர்களுக்கு கொடுப்பதால் அடுத்த அடுத்த அடுத்த ஆண்டுகளில் செல்வ செழிப்பு அதிரிக்கவும் லட்சுமி தேவியின் முழுமையான அருளை பெறவும் துணைப்புரியும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
