பிக்பாஸ் அக்ஷராவுக்கு அடித்த ஜாக்பாட்! 1 கோடி ரூபாயில் பிரம்மாண்ட கார் பரிசு.. வைரலாகும் புகைப்படம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அக்ஷராவுக்கு அவரது அண்ணன் பரிசாக வழங்கிய சொகுசு கார் மீது அமர்ந்தபடி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த சீசனில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில் நடிகை அக்ஷராவும் ஒருவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 80 நாட்கள் இருந்த அக்ஷரா கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்ற நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.
மாடலிங் அழகியாக தனது பணியைத் தொடங்கி இண்டர்நேஷன்ல் பியூட்டி பேஜன்ட் என்கின்ற பரிசு பெற்றுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் மூலம் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ரசிகர் பட்டாளங்களை பெற்றுள்ளார்.

பிக்பாஸ் ஃபைனல் வரை பிக் பாஸ் வீட்டில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 நாட்களிலேயே வெளியே வந்த அக்ஷராவுக்கு அவருடைய அண்ணன் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் காரை பரிசாக வழங்கியுள்ளார்.
அந்த காரின் மீது அக்ஷரா அமர்ந்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.