அஜித்தையும், விஜய்யையும் ஒன்றாக இணைத்த ரசிகர்கள்! வைரலாகும் பேனர்
2023ம் ஆண்டு பொங்கல் பரிசாக வெளியாகவுள்ள அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படங்களால் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.
பொங்கல் விருந்து
விழாக்காலங்களில் வெளியாகும் டாப் நடிகர்களின் படங்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்தே காணப்படும்.
இந்த ஆண்டு விஜய் மற்றும் அஜித் என இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி பட்டையை கிளப்பவுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் 'துணிவு' படமும் வம்சி இயக்கத்தில் வாரிசு படமும் உருவாகியுள்ளது.
சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரின் படங்கள் ஒன்றாக வரவுள்ளதால் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டுள்ளது.
ஒரே பேனரில் விஜய், அஜித்
தங்கள் ஹீரோக்களின் படங்கள் வெற்றியடைய வேண்டுமென இப்போதே இருவரின் ரசிகர்களும் போட்டிபோடத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் இரு படமும் வெற்றியடைய வேண்டும் எனக்கோரி அஜித், விஜய்யை இணைத்து ரசிகர்கள் உருவாக்கியுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.
அதில் தல ரசிகர்கள் சார்பாக வைக்கப்பட்டுள்ள போஸ்டர் பெரும் கவனத்தை பெற்று வருகிறது.
இந்த ஒற்றுமையையே பலரும் எதிர்பார்க்கிறோம் என பாராட்டுகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.