வீரம் படத்தில் நடித்த குட்டி பொண்ணா இது? இப்போ தேவதையாகவே மாறிட்டாங்களே!
வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்த யுவினாவின் தற்போதைய காணொளியொன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
வீரம் திரைப்படம்
தல அஜித் மற்றும் தமன்னா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் தான் வீரம். கடந்த 2014ம் ஆண்டு வெளியான இப்படத்தில் அஜித், தமன்னா, விதார்த், பாலா, சந்தானம், நாசர், பிரதீப் ரவாத் என பலர் பிரபலங்கள் இணைந்து நடித்திருப்பார்கள்.
அண்ணன்-தம்பிகள் பாசத்தை முதன்மைப்படுத்தும் இந்த திரைப்படத்தில் காதல், அதிரடி ஆக்ஷன், காமெடி என எதற்கும் பஞ்சம் இல்லாத வகையில் கதைகளம் நகரும்.
இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்து ரசித்தவர் இப்போது முன்னணி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு தேவதையாகவே மாறிவிட்டார்.
இந்நிலையில் அழகிய சேலையில் கொள்ளை அழகில் ரசிகர்களை கவரும் யுவினாவின் தற்போதைய காணொளியொன்று இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |