பெண்ணிற்கு NO... 25 கிலோ எடையை இயற்கை முறையில் குறைத்த அஜித்தின் டிரெண்டிங் வீடியோ!
செல்ஃபி எடுக்க கேட்ட பெண்ணிற்கு NO சொல்லிவிட்டு நடிகர் அஜித் மன்னிப்பு கேட்டு சென்ற வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
அஜித் தற்போது டைரக்டர் ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷுட்டிங் ஏப்ரல் மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது.
ஏகே 61 படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

டிரெண்டாகும் அஜித்
ஏகே 61 படத்திற்காக அஜித் 25 கிலோ வரை உடல் எடையை இயற்கை முறையில் குறைத்துள்ளார்.
இவரின் லேட்டஸ்ட் லுக் போட்டோக்கள் அடிக்கடி இணையத்தில் கசிந்து டிரெண்டாகி வருகின்றது.
தற்போது படப்பிடிப்புகளுக்காக அவசரமாக சென்ற அஜித்திடம் ஏர்போர்ட்டில் விமான நிலைய பெண் ஊழியர் ஒருவர் செல்ஃபி எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
Thala Walk.!???#AK61 #AK62 #AjithKumar
— குமரி தல தீனா குரூப்ஸ் ?? (@Kumari_AjithFC) June 15, 2022
pic.twitter.com/tNeTdAN9wj
ஆனால் அஜித் அவசரமாக சென்றதால், அதற்கு நோ சொல்லி மறுத்துள்ளார். இருந்தாலும், போகிற அவசரத்திலும் அந்த பெண்ணை திரும்பிப் பார்த்து Sorry மா என சொல்லி விட்டு சென்றுள்ளார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி செம டிரெண்டாகி வருகிறது.