ரசிகர்களுக்கு பயந்து தெறித்து ஓடிய ஷாலினி! வலிமை பட திரையரங்கில் நடந்தது என்ன?
அஜித் ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பாக இருந்த வலிமை திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
சென்னையில் திரையரங்குகளில் ரசிகர்கள் செய்த சேட்டைகள் அளவுக்கதிகமாகவே இருந்தது. பல திரையரங்குகளில் எல்லை மீறி நடந்து கொண்ட அஜித் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையும் திணறிப் போனது.
இந்த சமயத்தில் அஜித்தின் வலிமை படத்தை பார்ப்பதற்காக அவரது மனைவி நடிகை ஷாலினி எப்பொழுதுமே சென்னையில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கிற்கே வருவார்.
ஆனால் இந்த முறை கோயம்பேடில் ரோகிணி திரையரங்கிற்கு செல்வதற்கு முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் குறித்த திரையரங்கிற்கு திரையரங்கிற்கு இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வந்து இருக்கின்றார். அவரை பார்த்த ரசிகர்கள் அவரது கார் முழுக்க பாலாபிஷேகம், தயிர் அபிஷேகம் என செய்து மாலை போட்டு பயங்கர சேட்டைகளை செய்துள்ளனர்.
ஒருவழியாக ரசிகர்களின் அலப்பறைகளுக்கு மத்தியில் எஸ்கேப் ஆகியுள்ளார் போனி கபூர். இதனைக் கேள்விப்பட்ட ஷாலினி கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க யோசித்த தனது ஆசையை மாற்றிக்கொண்டு வேண்டவே வேண்டாம் என திரையரங்கு அருகில் வந்தும், பதறிப் போய் திரும்பவும் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருந்தால் அங்கு காவலுக்கு நின்ற காவல்துறையினர் தான் அரசுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் பெரும் அலப்பறையில் ஈடுபட்டனர்.