விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம்
நடிகர் அஜித்குமார் பத்மபூஷன் விருது வாங்குவதற்காக குடும்பத்துடன் டெல்லிக்குச் சென்ற போது அவரின் மகனிடம் குடியரசுத் தலைவர் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் அஜித்குமார்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் தான் அஜித்குமார்.

இது என்னடா pilots-க்கு வந்த சோதனை- டிடியுடன் சேர்ந்து ஏ. ஆர். ரகுமான் பாடலுக்கு வைப் செய்த இளைஞர்கள்
இவர் தமிழ் சினிமாவில் 60 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் நடிப்பில் GBU திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டையால் பணத்தை அள்ளிக் கொண்டிருக்கிறது.
கடந்த 1990ஆம் ஆண்டு “என்வீடு என்கணவர்” என்றத் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு பிறகு கடந்த 1993 ஆம் ஆண்டு அமராவதி திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக தலை காட்ட ஆரம்பித்தார்.
அமராவதியில் ஆரம்பித்த தற்போது துணிவாக விடாமுயற்சியை தொட ஆரம்பித்திருக்கிறார்.
பத்மபூஷன் விருது

Tamizha Tamizha: பதக்கம் வாங்கும் போது பக்கத்தில் இல்லாத அப்பா....அரங்கத்தில் தொகுப்பாளர் கொடுத்த பதில்
மேலும், தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடி யாரென்று கேட்டால் யோசிக்காமல் வாயில் வரும் பெயர் அஜித் - சாலினி என்று சொல்வார்கள். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காதல் ஜோடிகளாக தற்போது வரை வலம் வருகின்றார்கள். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நடிகர் அஜித்திற்கு தமிழ்நாடு சார்பில் பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்டது.
மேலும் நான்கு விஜய் விருதுகள், மூன்று சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள், மூன்று பிலிம்பேர் விருதுகள் தென் மற்றும் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.
புகைப்படத்தில் சிக்கிய செய்தி
இதற்கிடையில் விருது விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவருடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு அஜித்தின் குடும்பம் வணக்கம் சொல்லி மரியாதை செய்கிறார்கள். அப்போது அஜித்தின் மகனான ஆத்விக்கின் இரண்டு கன்னங்களையும் தொட்டு அஜித்தின் மகனிடத்தில் ஏதோ பேசுகிறார்.
அப்போது அருகில் இருக்கும் அஜித்தின் மகள் அனோஷ்கா மிகவும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டு உள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “அப்படி என்ன கூறியிருப்பார்..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |