பத்ம பூஷண் விருதை பெற்ற போது அஜித் மனைவி கொடுத்த ரியாக்ஷன்- கேமராவில் சிக்கிய காட்சி
நடிகர் அஜித்குமார் பத்ம பூஷண் விருதை வாங்கிய போது அவரின் மனைவி மற்றும் மகள் கொடுத்த ரியாக்ஷன் சமூக வலைத்தளங்களில் காணொளியாக வைரலாக்கப்பட்டு வருகிறது.
கடந்த 1993ம் ஆண்டு “அமராவதி” என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி “good bad ugly” வரை 63 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அஜித்குமார்.
சினிமா மட்டுமல்லாமல் ட்ரோன்களை தயாரிக்கும் எம்.ஐ.டி குழுவிற்கு ஆலோசகர், மாநில அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் அங்கம், மோட்டர் சைக்கள் பயணங்களை ஊக்குவிக்க வீனஸ் மோட்டர் சைக்கிள் டூர்ஸ் நிறுவனம், கார் பந்தயத்தில் சர்வதேச அளவில் சாதனைகள் உள்ளிட்ட பல வேலைகளை செய்து வருகிறார்கள்.
யாருக்கெல்லாம் விருதுகள் கொடுக்கப்பட்டன..
இப்படியொரு சமயத்தில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பலருக்கு இன்றைய தினம் பத்ம விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதமே மத்திய அரசு அறிவித்திருந்தது. பல துறைகளிலும் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
அதில், தமிழகத்திலிருந்து 19 பேர் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார் மற்றும் கிரிக்கெட்டர் அஷ்வின் இருவருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.
பத்ம பூஷண் விருது
இந்த நிலையில் இன்றைய தினம்பல்வேறு துறைகளில் பங்காற்றி வரும் நடிகர் அஜித்குமாருக்கு மத்திய அரசு, “பிரபல தமிழ் நடிகர்” மற்றும் “கார் பந்தய ஓட்டுநர்” உள்ளிட்ட கலை பிரிவில் “பத்ம பூஷண்” விருதைக் கொடுத்து கெளவரப்படுத்தியுள்ளது.
அப்போது அங்கு மனைவி ஷாலினி, குழந்தைகள் அனுஷ்கா-ஆத்விக் மற்றும் அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் அஜித் பத்ம பூஷண் விருதைப் பெறுவதை நெகிழ்ச்சியுடன் பார்த்து பெருமிதப்பட்டனர்.
#PadmaAwards2025 ||
— All India Radio News (@airnewsalerts) April 28, 2025
President #DroupadiMurmu confers the Padma Awards at Rashtrapati Bhavan.
Award: 𝐏𝐚𝐝𝐦𝐚 𝐁𝐡𝐮𝐬𝐡𝐚𝐧
S Ajith Kumar
Field: Art
S. Ajith Kumar is a Popular Tamil film actor and racing driver. He has been awarded the Padma Bhushan for his contributions… pic.twitter.com/b4aqVa2lY8
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |