அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருது- அஜித் வெளியிட்ட திடீர் அறிக்கை
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமார்.
இவர், துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்து கொண்டதன் மூலம் தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறார்.
அத்துடன் நடிகர் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியீடு தள்ளிப்போயுள்ளது.
இதனை தொடர்ந்து எதிர்வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித்தை திரையில் காணப் போகும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர்.
அஜித்துடன் இணைந்து நடிகர் அர்ஜுன், ஆரவ், ரெஜினா, சில மலையாள நடிகர்கள் விடாமுயற்சி படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பத்ம பூஷன் விருது அறிவிப்பு
இந்த நிலையில், பிறந்திருக்கும் 2025ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் அஜித் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கானது மட்டுமல்ல. இதனை சாத்தியப்படுத்திய பலரது உழைப்பும் இதில் அடங்கும் என்பதை உணர்வேன்.
எனது மதிப்பிற்குரிய திரைத்துறையினர், திரைத்துறை முன்னோடிகள், என் நண்பர்கள் உட்ப அனைவருக்கும் எனது நன்றி” என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த அறிக்கையில் தன்னுடைய மனைவி, மகள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
இந்த அறிக்கையை பார்த்த அஜித் ரசிகர்கள்,“ அஜித் அடக்கம் மற்றும் அமைதி தான் அவரின் வெற்றியை நாளுக்கு நாள் தீர்மானிக்கிறது..” என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |