காலில் கட்டுடன் வீல்சேரில் உலா வரும் ராஷ்மிகா- நடந்தது என்ன? அவரே வெளியிட்ட பதிவு
நடிகை ராஷ்மிகா மந்தனா காலில் கட்டுடன் வீல் சேரில் உலா வருவதற்கான காரணத்தை அவருடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா
இந்திய அளவில் அதிகமாக ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரை ரசிகர்களின் கனவு கன்னி என்றும் சொல்லலாம்.
ராஷ்மிகா“ கீதா கோவிந்தம்” என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் பிரபலமானவர்.
இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை கொடுத்தது. அன்றிலிருந்து இன்று வரை டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். பரபரப்பான நடிகையாக இருந்து ராஷ்மிகா விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்திருந்தார்.
தற்போது சல்மான்கானுடன் ஜோடி போட்டு “சிக்கந்தர்” படத்திலும் தனுஷுக்கு ஜோடியாக “குபேரா” படத்திலும் நடித்து வருகிறார்.
காலில் எப்படி அடிப்பட்டது?
இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த சில தினங்களாக காலில் கட்டுடன் அங்குமிங்கும் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இது குறித்து பதிவு வெளியிட்ட ராஷ்மிகா, அவர் ஜீம்மில் உடற்பயிற்சி செய்யும் பொழுது அவரின் காலில் அடிப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் காலூக்காக அவர் எடுத்து கொள்ளும் சிகிச்சைக்கான ஆதரங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பதிவை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகாவிற்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |