கஜினி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் படமான கஜினி படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கஜினி
கடந்த 2008ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் கஜினி, இப்படத்தில் சூர்யா, அசின், நயன்தாரா என பலரும் நடித்திருப்பார்கள்.
இவர்கள் அனைவரின் சினிமா கெரியரில் முக்கிய படமாகவும் இது அமைந்தது, விறுவிறுப்பான திரைக்கதை, சூர்யா- அசினின் நடிப்பு என அனைத்துமே கச்சிதமாக அமைந்தது.
இப்படம் பாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட்டு சூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் இப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கஜினிக்கு பதிலாக மிரட்டல் என்ற பெயரில் அஜித் நடிக்க இருந்தாராம், இதற்கான படப்பிடிப்பும் சில நாட்கள் நடந்த நிலையில், மொட்டையடித்து தழும்புடன் நடிக்க அஜித் மறுத்துள்ளார்.
இதனால் படத்தில் இருந்து விலகிய நிலையில், சூர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதேபோன்று நயன்தாரா மற்றும் பிரதீப் ராவத் கதாபாத்திரத்துக்கு முதலில் ஷ்ரேயா சரண் மற்றும் பிரகாஷ் ராஜ் நடிக்கவிருந்தார்களாம்.
இப்படி பல நடிகர்கள் மாற்றம் செய்யப்பட்ட தகவல்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |