புர்கா அணிந்து அடையாளம் தெரியாமல் மாறிய மும்தாஜ்! சினிமாவை விட்டு விலக யார் காரணம்?
நடிகை மும்தாஜ் தான் சினிமாவை விட்டு விலகுவதற்கு யார் காரணம் என்பதை தற்போது கூறியுள்ளார்.
நடிகை மும்தாஜ்
டி.ராஜேந்திரன் இயக்கிய மோனிஷா என் மோனலிசா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமான நடிகை மும்தாஜ்.
ஆரம்பத்தில் நீச்சல் உடையணிந்தும், கிளாமரான பல உடைகளில் நடித்து வந்த இவர் தற்போது ஹிஜாப் அணிந்து முழு முஸ்லீம் பெண்ணாக இருக்கின்றார்.
மோனிஷா என் மோனலிஷா படத்தின் பாடல்கள் மும்தாஜ் மூலமாகவே ரசிகர்களின் பிடித்த பாடலாக மாறியது. குஷி, சாக்லேட் உட்பட பல படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு கிளாமராக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
கடைசி வரை கவர்ச்சி நடிகையாகவே பலரும் அறிந்த இவர், பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு தனது மீது இருந்த பார்வையை மாற்றினார்.
சினிமாவை விட்டு விலகியது ஏன்?
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் எதற்காக சினிமாவை விட்டு விலகினேன் என்ற காரணத்தை கூறியுள்ளார்.
உண்மையில் இஸ்லாமிய பெண்ணாக பிறந்த இவர், குர்ஆன் பற்றி நன்றாக தெரிந்து கொண்டதுடன், சில விடயங்கள் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை அல்லாஹ் கட்டளை இட்டார்.
ஆரம்பத்தில் குர்ஆனில் சொல்லப்பட்டிருந்த விடயத்தை அர்த்தம் தெரியாமல் இருந்த நான், ஒரு கட்டத்தில் அது புரிய ஆரம்பித்த போது எனக்குள் மாற்றம் தொடங்கியது. அதன் பின்பு தான் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்ற முடிவை எடுத்துள்ளாராம்.
இவர் சினிமாவை கைவிடுவதற்கு அல்லாஹ் தான் காரணம். ஒரு நாள் வீட்டில் அமர்ந்திருந்த போது அவரது உடையை சரி செய்துள்ளாராம்.
பின்பு கண்ணியமான உடை அணிந்துள்ளார். சினிமாவில் நீச்சல் உடை அணிந்து நடித்து பார்த்த மக்களுக்கு இது வித்தியாசமாக தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
திருமணம் குறித்து பேசுகையில், நான் காதலித்த நபர் சினிமா துறையை சார்ந்தவர் இல்லை என்பதால் இங்கே பலருக்கும் அவரை தெரிந்திருக்காது என்று கூறி ஒருநிமிடம் கண்கலங்கியுள்ளார்.
மும்தாஜிற்கு 20 வயதில் ஒரு ஆப்ரேஷன் நடந்ததாகவும், 26 வயதிருக்கும் போது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது அதனால் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாமல் சென்றுவிட்டது என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |