“15 மணி நேரம்”அஜித் அன்றே இதை செஞ்சிட்டாரு.. ரசிகர்களை உசுப்பேத்திய ட்விட்டர் பதிவு
விஜய் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டது போல் நடிகர் அஜித்தும் கலந்து கொண்டுள்ளார் என சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகின்றது.
வெள்ளித்திரை நட்சத்திர நாயகர்கள்
தமிழ் சினிமாவில் இன்று நட்சத்திர நாயகர்களாக ஜொலித்து கொண்டிருப்பவர்கள் தான் நடிகர் அஜித் மற்றும் விஜய்.
இவர்கள் திரைப்படங்கள் துவக்கம் இவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் வரை ரசிகர்கள் இருவருக்கும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அந்தவகையில், நேற்றைய தினம் “நீலாங்கரையில் விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக நடிகர் விஜய் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய பதிவு
அப்போது அந்த நிகழ்வில் சுமார் 12 மணித்தியாலங்கள் தொடர்ந்து விஜய் நின்றுக் கொண்டிருந்தால் அவரின் கால்கள் வலி போன்று காட்டி கொண்டார்.
இந்த நிலையில் கடந்த 2004 ஆம் நடிகர் அஜித் இது போன்ற நிகழ்வில் கலந்து கொண்டு சுமார் 15 மணி நேரம் வரை நின்று ரசிகர்கள், மாணவர்கள் என அனைவருடனும் புகைப்படம் எடுத்துள்ளார் என விஜய் குற்றி பேசும் படி பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு விஜய் ரசிகர்களையும் அஜித் ரசிகர்களையும் துண்டி விடும் படி இருக்கின்றது என இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
2004 ல தலைவர் #அஜித்குமார் அவர்கள் திருவண்ணாமலையில் 10, 000 மேற்பட்ட மாணவர்கள் ..ஆசிரியர்கள்.. அவர்களின் குடும்பத்தினர் .. மற்றும் ரசிகர்களுடன் 15 மணிநேரத்திற்கு மேல் நின்றுகொண்டே புகைப்படம் எடுத்து மரம் நட வலியுறுத்தியும்.நம் நகரத்தை துய்மையாக வைத்துகொள்ள வலியுறுத்தினார் அன்றே pic.twitter.com/079eJGWdMc
— saravanan Thiruvannamalai (@saravanan7010) June 18, 2023