ரசிகரின் மரணம்! அஜித் விஜய் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சி
துணிவு படத்தினை பார்க்கச் சென்ற ரசிகர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அஜித் மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.
ரசிகர் திடீர் மரணம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜீத், ரசிகர்களால் தல என்று அழைக்கப்பட்டார். கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ள இவரின் திரைப்படம் வெளியீடு என்றாலே ரசிகர்கள் அந்த திரையரங்குகளில் குவிந்துவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், 11ம் தேதி இரவு துணிவு படம் வெளியாகியுள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உட்பட பல பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி கடந்த 11ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகின்றது. வசூலிலும் சாதனை பெற்று வருகின்றது.
இந்நிலையில் படத்தினை பார்க்க வந்த பரத்குமார் என்ற ரசிகர் கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
விஜய் அஜீத் எடுத்த முடிவு என்ன?
தற்போது விஜய் மற்றும் அஜித் இருவர் மீது சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வகுமார் என்பவர் காவல் ஆணையரிடம் இணைய வழியாக புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் அஜித் மற்றும் விஜய் இருவரும் அதிரடி முடிவு ஒன்றினை எடுத்துள்ளார்களாம். அதாவது இனி சிறப்பு காட்சி போட வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளதால், ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கடும் அதிர்ச்சியில் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.