திருமணத்தில் மணப்பெண்ணிற்கு டப் கொடுக்கும் அஜித் மகள்- பார்த்து வியந்து போன இணையவாசிகள்
திருமண விழாவில் மணப்பெண்ணிற்கே டப் கொடுக்கும் வகையில் அஜித் மகள் வந்திருந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் அஜித் மகள்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் தான் நடிகர் அஜித்.
இவர், தற்போது குடும்பத்துடன் துபாயில் தான் அதிகமாக வசித்து வருகிறார்.
தளபதிக்கு இணையான நடிகராக இருக்கும் அஜித், தமிழ் படங்களில் நடிப்பது மட்டுமின்றி கார் ரேஸிங் டீம் வைத்திருக்கிறார். இதன் காரணமாக இந்தியாவை விட கூடுமான நேரம் துபாயில் தான் இருந்து வருகிறார்.
அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் என குடும்பத்தினரின் ஒரு புகைப்படம் வெளியானால் கூட அது இணையத்தில் பெரிய அளவில் வைரலாக விடும். அந்தளவு தமிழ் நாட்டில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
பி.வி சிந்து திருமணத்தில் அஜித் குடும்பம்
இந்த நிலையில் தற்போது பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமண நிகழ்ச்சிக்கு அஜித் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரின் மகள் சிவப்பு நிற ஆடை அணிந்து அசல் மணப்பெண் போன்று அலங்காரம் செய்து கொண்டு வந்திருந்தார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அஜித் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
“அஜித் மகளின் லேட்டஸ்ட் லுக்” பார்த்த இணையவாசிகள், “இவரே ஒரு நடிகை போல் தான் இருக்கிறார்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |