அட இவங்கதானா.. விஜய் கையில் இருக்கும் “குட்டி பொண்ணு” யார் தெரியுமா?
படத்தில் விஜய் கையில் அமர்ந்திருக்கும் சிறுமியின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
திரைப்படங்களை போலவே சின்னத்திரைகளில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர்.
சமூக வலைதளங்களில் டிவி நடிகர், நடிகைகளுக்கென்றே தனி ஃபேன் பேஜ் துவங்கி கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “இதயத்தை திருடாதே” என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஹிமா பிந்து. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு மற்றும் சிறந்த இடமும் உள்ளது.
நடிகை பிந்து படையப்பா படத்தில் வரும் “எம்பேரு படையப்பா” பாடலுக்கு நான் மீச வச்ச குழந்தையப்பா.. என்ற வரியின் போது ரஜினியின் முகம் குழந்தையின் முகமாக மாறும். அந்த குழந்தையும் ஹிமா பிந்துதான்.
விஜய்யுடன் இருக்கும் குழந்தை யார்?
வெள்ளத்திரையில் சிறுவயது முதல் ஆக்டிவாக இருந்த பிந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இலக்கிய” சீரியலில் நடித்து வந்தார்.
சின்னத்திரையில் பிஸியாக இருக்கும் பிந்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். இவர் சிறுவயதில் தளபதி விஜய்யுடன் இருக்கும் புகைப்படமொன்றை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “நீங்களா அது?” என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |