தோனியே இல்லாத ஐபிஎல் ப்ளேயிங் 11 - முன்னாள் வீரரின் அதிர்ச்சி தேர்வு
ஐபிஎல் 2022 போட்டியானது மார்ச் 26-ம் தேதி நடைபெறுகிறது. இதனால் பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் தன்னுடைய ஆல்டைம் பேவரைட் ஐபிஎல் பிளேயிங் 11-ஐ ரிலீஸ் செய்துள்ளார்.
அதன்படி, கிறிஸ் கெய்லை ஓபனர் பேட்ஸ்மேனாக தேர்வு செய்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக்கை மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக தேர்வு செய்துள்ளார்.

அடுத்ததாக, 3 இடத்தில் மிஸ்டர் ஐபிஎல் சுரேஷ் ரெய்னாவை சேர்த்துள்ள அகார்கர், 4-வது இடத்துக்கு விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். மேலும், அணியின் கேப்டனாகவும் அவரை நியமித்துள்ளார்.
மிடில் ஆர்டரில் ரோகித் சர்மாவை தேர்வு செய்ய அவருக்கு அடுத்தப்படியாக ஏபி டிவில்லியர்ஸையும் எடுத்துள்ளார். பந்துவீச்சாளர்களில் 5 பேரை தேர்வு செய்துள்ளார் அகார்கர்.
மும்பை அணியின் நட்சத்திரமாக இருந்த லசித் மலிங்கா, சுனில் நரைன், புவனேஷ்வர் குமார், ஹர்பஜன் சிங் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் அகார்கரின் ஆல்டைம் ஐபிஎல் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இதெல்லாம் இருந்தாலும், 4 முறை கோப்பைகளை வென்ற தோனிக்கு அணியில் இடமளிக்காதது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ப்ளேயிங் 11
கிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்), வீரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா, விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா), லசித் மலிங்கா (இலங்கை), சுனில் நரைன் (மேற்கிந்திய தீவுகள்), புவனேஷ்வர் குமார், ஹர்பஜன் சிங் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா.