திருமணத்தில் தோழிகள் கொடுத்த சர்ப்ரைஸ்! தேம்பி தேம்பி அழுத மணமகள்
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றன.
மணமகன் மற்றும் மணமகளின் நண்பர்கள் வராத திருமணம் கண்டிப்பாக நிறைவடையாது. இவர்கள் தங்களுக்கே உரிய பாணியில் திருமணத்திற்கு அழகு சேர்க்கிறார்கள். இதனுடன், அனைத்து சடங்குகளிலும் இவர்கள் தங்கள் தோழன் / தோழியுடன் இருந்து அவர்களுடைய மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறார்கள்.
இந்த உணவுகளை மீண்டும் சூடு படுத்தாதீங்க! விஷமாக மாறும் ஜாக்கிரதை
இப்படிப்பட்ட ஒரு திருமண வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதில் மணமகன் மற்றும் மணமகளின் தோழர்களும் தோழிகளும் தங்களது அழகான நடனத்தால் அனைவரையும் கவர்ந்து விடுகிறார்கள். இந்த வீடியோவில் தனது தோழிகள் நடனமாடுவதைப் பார்த்து மணமகள் உணர்ச்சிவசப்படுவதை காண முடிகின்றது.
வைரலாகி வரும் இந்த வீடியோ-வில், திருமணத்துடன் தொடர்புடைய மெஹந்தி விழாவில் மணப்பெண் தனது தோழிகளுடன் நடனமாடுவதைக் காண முடிகின்றது. தனது திருமணத்தில் தோழிகள் ஆடிய நடனத்தை பார்த்த மணமகள் திடீரென உணர்ச்சிவசப்படுகிறார். பின்னர் அவரது தோழிகள் அவரை சமாதானப்படுத்துகிறார்கள். மெஹந்தி விழாவின் போது வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் இந்த நடனத்தாலும் தோழமையாலும் கவரப்படுகிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.