தந்தையர் தினத்தையோட்டி ரஜினிகாந்த் மகள் வெளியிட்ட பதிவு- வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
தந்தையர் தினத்தையோட்டி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளிட்ட பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் இன்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.
தன்னுடைய தனித்துவமான ஸ்டைலால் கோலிவுட் சினிமாவில் பிரபலமானவர்.
இவர் நடிப்பில் கடைசியாக லால் சலாம் திரைப்படம் வெளியானது. இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த ரஜினிகாந்த் சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டார்.
தந்தையர் தின வாழ்த்து பதிவு
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1981 ஆம் ஆண்டு லதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
இன்றைய தினம் எம்மை வளர்த்து ஆளாக்கிய தந்தையர்களுக்கான தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையோட்டி பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் தந்தைக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ரஜினிகாந்திற்கு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்து பதிவொன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், " என்னுடைய இதய துடிப்பு அப்பா” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு ரஜினிகாந்த் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அத்துடன், “அப்பா என்றால் இவ்வளவு பாசமா?” என கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றார்கள். .
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |