தவறி விழுந்த ராதிகா.. வீண் பழியுடன் வீடு திரும்பிய ஈஸ்வரி- குழந்தை கலைந்து விட்டதா?
ராதிகா வயிற்றிலுள்ள குழந்தை கலைந்து போனதற்கு ஈஸ்வரி தான் காரணம் என கோபியிடம் ராதிகா கூறுகிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் ராதிகா - கோபி இருவரும் கடந்த தினங்களாக பேசிக் கொள்வதில்லை. பாக்கியா அவ்வப்போது ராதிகாவின் வீட்டிற்கு வந்து ஈஸ்வரியை பார்த்து செல்கிறார்.
தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை வைத்து கொண்டு கோபி குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கு பாக்கியா வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் சண்டை பிடித்து கொண்டு ராதிகாவையும் ஈஸ்வரியையும் ராதிகா - வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
கரு கலைந்து விட்டதா?
இந்த நிலையில் ராதிகா - ஈஸ்வரி இருவரும் ஒரே வீட்டில் குடியேற ஆரம்பித்த முதல் நாளிலிருந்து சண்டை போடுகிறார்கள். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குணமாகிய பின்னர் கோபி, “ அம்மாவை நானே பார்த்து கொள்கிறேன்.” என கூறி மீண்டும் ஈஸ்வரியை ராதிகா வீட்டிற்கே அழைத்து வந்தார்.
இதனிடையே ராதிகா, ஈஸ்வரியிடம் பேசி விட்டு திரும்பி போது பூச்செண்டு தவறி கீழே விழுகிறார். ஆனால் “ஈஸ்வரி தான் தன்னை தள்ளி விட்டார்” என கோபியிடம் ராதிகா கதையை மாற்றிக் கூறுகிறார்.
இதனால் கடுப்பான கோபி, தன்னுடைய குழந்தை கலைந்து போனதற்கு காரணம் அம்மா தான் என நினைத்து ஈஸ்வரியிடம் கடுமையாக பேசி விடுகிறார்.
இந்த பலியை தாங்க முடியாத ஈஸ்வரி பாக்கியாவிடமே செல்கிறார். பாக்கியாவிடம் விஷயத்தை கூறிய போது பாக்கியாவே அதிர்ச்சியடைகிறார்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |