ஐஸ்வர்யாவின் நகையை திருடிய கில்லாடி பெண்! சிக்கியது எப்படி?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகையில் தற்போது 20 பவுன் நகை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்குனர், பின்னணி பாடகி, நடனகலைஞர் என பன்முக திறமை கொண்டவர் ஆவார்.
இவரது வீட்டில் அரங்கேறிய கொள்ளை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 60 பவுன் தங்க நகை மற்றும் வைர நகைகள் திருட்டு போயுள்ளதாகவும், சுமார் 3 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போயுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால் இந்த கொள்ளை சம்பவத்திற்கு தனது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் காரணமாக இருக்கலாம் என்று ஐஸ்வர்யா மூன்று பேரின் பெயரை பொலிசாரிடம் கூறியிருந்தார்.
ஐஸ்வர்யா தனது லாக்கரில் வைக்கப்பட்ட நகைகள் காணாமல் போன நிலையில், அதன் சாவியை வைக்கும் இடம் மூன்று பேருக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
பொலிசாரின் விசாரணையில், வேலைக்கார பெண் ஈஸ்வரி(40) என்பவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது. பின்னர் அவரின் சமீபத்திய வங்கி கணக்கை பரிசோதனை செய்ததன் மூலம் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர்.
அவரிடமிருந்து இருபது பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்து மீதம் 40 பவுன் நகைகள் மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிபால் கூறியுள்ளார்.