ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நகை திருட்டு வழக்கு - 3வது நபர் கைது
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நகை திருட்டு வழக்கில் 3வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருட்டு
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டு லாக்கரில் இருந்த தங்க நகைகள், வைரம், நவரத்தின கற்கள் காணாமல் போனதாக போலீசில் புகார் கொடுத்தார்.
இது தொடர்பான வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, போலீசார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு கொண்டனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை செய்யும் ஈஸ்வரியின் வங்கி கணக்கில் பண பரிவர்த்தனையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ரூ.1 கோடிக்கு சொகுசு வீடு வாங்கிய வேலைக்காரி
இதனையடுத்து, ஈஸ்வரி மற்றும் அவரது கணவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கடந்த 2019ம் ஆண்டு ஈஸ்வரி வங்கியில் கடன் வாங்கி சோலிங்கநல்லூரில் ரூ.95 லட்சத்திற்கு நிலம் வாங்கியுள்ளார். இந்த கடனை ஈஸ்வரி இரண்டே வருடங்களில் திருப்பி செலுத்தினார்.
இதனால், போலீசாருக்கு அவர் மேல் சந்தேகத்தை அதிகரிக்க, ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து நகைகளை திருடியதை ஈஸ்வரி ஒப்புக்கொண்டார். திருடிய நகைகளை சென்னை மைலாப்பூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஈஸ்வரி விற்பனை செய்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஈஸ்வரியிடமிருந்து திருட்டு நகைகளை வாங்கிய நகைக்கடை உரிமையாளர்களிடமிருந்து, 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள் மற்றும் வெள்ளிக்கட்டிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் குற்றச்செயலில் ஈஸ்வரிக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் வெங்கடேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் 4 வருடங்களாக சிறுக சிறுக தங்க வைர நகைகளை திருடி சுமார் 1 கோடிக்கு சொகுசு வீடு வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
3-வது நபர் கைது
இந்நிலையில், இந்த திருட்டு வழக்கில் 3-வதாக ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபோன்ற திருட்டு நகைகளை வாங்கியதாக மயிலாப்பூர் சேர்ந்த வினால்க் சங்கர் நவாலி என்பவரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.