ரஜினி மகள் வீட்டில் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பெண்! அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள்
ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் பல பெறுமதியான நகைகளும் பணமும் திருடப்பட்ட நிலையில் அவற்றைத் திருடியவர்கள் தொடர்பில் பல தகவல்கள் கண்டுப்பிடிப்பட்டுள்ளது.
வீட்டில் கைவரிசையை காட்டிய பணியாளர்கள்
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் தனது வீட்டில் லாக்கரில் வைத்திருந்த பெறுமதியான பல இலட்சம் ரூபாய் பணமும் வைர, நவரத்தினம் கொண்ட தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐஸ்வர்யா தேனாம்பேட்டை பொலிஸ்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். குறித்த புகாரில் நெக்லஸ்கள், ஆரம், வைர நகைகள் உள்ளிட்ட 60 சவரன் நகைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொடுக்கப்பட்ட புகாருக்கமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் முதலில் ஐஸ்வர்யா வீட்டில் பணியாளர்களிடம் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.
விசாரணையில் வெளிவந்த உண்மைகள்
இதில் வெளிவந்த தகவலானது, ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரிந்து பின் நடிகர் தனுஷ் வீட்டில் பணிபுரிந்து வந்த ஈஸ்வரி(46) என்ற பெண் ஆறு மாதத்திற்கு முன்பு திடீரென வேலையில் இருந்து நின்று விட்டதாக தெரிய வந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் ஈஸ்வரியிடம் விசாரணை மேற்கொண்ட போது இவர் கடந்த 18 ஆண்டுகளாக ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது.
இவர் 2019ஆம் ஆண்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகையைத் திருடி சேர்த்து கொடுக்க அவற்றை அவரின் கணவர் அங்கமுத்து வங்கியில் பணமாக சேர்த்து வைத்திருக்கிறார்.
மேலும், அந்த வீட்டில் பணிபுரிந்து வரும் கார் ஓட்டுநரான வெங்கடேசன் (44) என்பவரின் உதவியுடன் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணத்தை பல ஆண்டுகளாக திருடி வந்ததும் தெரிய வந்தது.
இவர்கள் இருவரும் 60 சவரன் நகைகள் மட்டுமின்றி சுமார் 110 சவரன் நகைகள், வைர கற்கள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் போன்றவற்றை கூட்டுசேர்ந்து திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.
இப்படி திருடிய பொருட்கள் மற்றும் பணத்தைக் கொண்டு 85இலட்சம் மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், இவர்களிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு பத்திரம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் இன்னும் பல விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
