தங்கையின் மகனோடு பொழுதை கழிக்கும் ஐஸ்வர்யா! வைரல் வீடியோ
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய தங்கையின் மகனோடு கார் ஓட்டி விளையாடும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விளையாடும் ஐஸ்வர்யா
சமீப நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா, தனுஷ் பிரிவு தொடர்பில் பல கருத்துக்கள், காணொளிகள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் தற்போது வித் கிருஷ்ணாவுடன் விளையாடும் காணொளியொன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தமகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் உடன் திருமணமாகி 18 ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் அவரிடம் இருந்து பிரிந்தார். அவருக்கு இரு மகன்கள் உள்ளனர்.
இளைய மகள் சவுந்தர்யா, கடந்த 2010 ம் ஆண்டு அஸ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்து, வித் கிருஷ்ணா என்கிற மகன் உள்ளார். இந்நிலையில் அஸ்வினை பிரிந்த சவுந்தர்யா, விஷாகன் வணங்காமுடி என்பவரை கடந்த 2019 ம் ஆண்டு திருமணம் செய்தார்.
சவுந்தர்யாவின் இரண்டாவது குழந்தை
இந்த நிலையில் கடந்த வாரம் இத்தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது ரஜினிகாந்த் வீட்டில் நான்கு பேரன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வித் கிருஷ்ணாவுக்கு கார்களை வைத்து விளையாட கற்பிப்பது போன்று காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த காணொளிக்கு“தலைவர் பேரன் என்றால் சும்மாவா ”என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.