அந்தரங்க தகவல்கள் லீக்! பிரபல நடிகையை ஏமாற்றிய நபர்: ஐஸ்வர்யா ராஜேஸின் வேதனை பகிர்வு
பிரபல நடிகையின் உதவியாளர் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் அட்டகத்தி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்பு காக்கா முட்டை படத்தில் தனது அட்டகாசமான நடிப்பினை கொடுத்திருந்தார்.
அதன்பின்னர் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவான ’கனா’ திரைப்படத்தின் மூலம் இவருக்கென்று தமிழ் சினிமாவில் தனி மார்க்கெட் உருவானது.
இந்நிலையில் அண்மையில் இவர் அளித்த பேட்டியில், தனது நம்பிக்கைக்குரிய உதவியாளர் ஒருவராலே ஏமாற்றப்பட்டது குறித்து வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
அதில், தன்னிடம் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த, நம்பிக்கைக்குரிய உதவியாளர் ஒருவர் தனக்கு எதிராக வேலை செய்ததாகவும், ரசிகர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தன்னைப்பற்றி தனிப்பட்ட விஷயங்களையும், தனது அலைப்பேசி எண்ணை பகிர்வது போன்ற வேலையை செய்து உள்ளார் என்றும், தனக்கு மிகவும் நம்பிக்கையான அவரே இதுமாதிரி செய்தது தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.
மேலும் அவர் மீது புகார் அளிக்க பலர் வலியுறுத்திய போதும், தப்பு நடந்து விட்டது இனிமேல் நாம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என்று நான் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டேன்.
என்னை போல மற்றவர்களுக்கு இதுபோன்று எந்த நிகழ்வும் நேரக்கூடாது என்பதற்காக இதனை நான் சொல்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தனக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக இருந்த ஒருவரே இப்படி செய்வதால் யாரை நம்புவது? யாரை நம்பக் கூடாது? என்றே எனக்கு புரியவில்லை’ என்று கூறியுள்ளார்.
ஐஸ்வர்யாவின் இந்த சம்பவத்தினைக் கேட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.