48 வயதில் நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா? இணையத்தில் வைரலாகும் வீடியோ
நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சமீபத்திய வீடியோவை கண்டு நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
நடிகை ஐஸ்வர்யா ராய் கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் அவர்களின் மகள் ஆராத்யாவுடன் மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது தாய் மகள் இருவரும் கருப்பு நிறை உடையணிந்திருந்தனர்.
அவர் கர்ப்பமாக இருப்பதை மறைப்பதற்காகவே அந்த ஓவர்கோட்டை போட்டிருந்ததாக கூறி பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மீண்டும் கர்ப்பமா?
அந்த வீடியோவில் மகளின் கையை பிடித்தவாறு நடந்துவரும் போது, அவர் கர்ப்பமாக இருப்பது போல் தோன்றியதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதேப்போலவே அவரும் வயிற்றை மறைத்தப்படியே சிறிது தூரம் நடந்தார். எனவே ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் எனவும் இந்த வீடியோ வைரலாகவும் பரவி வருகிறது.
ஐஸ்வர்யா ராய் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஐஸ்வர்யா, பழுவூர் இளவரசி, பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினியாக நடித்துள்ளார்.