Airtel வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்... ரூ.17,000 மதிப்புள்ள Perplexity Pro AI இலவசம்!
ஏஐ சந்தையில் வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது Perplexity AI நிறுவனம்.இந்த நிறுவனம் ஏர்டெல்லுடன் இணைந்து ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஏர்டெல் 12 மாத Perplexity Pro சந்தாவை இலவசமாக வழங்கவுள்ளது.
அதாவது, ஒரு வருடத்திற்கு ரூ.17,000 விலையில் உள்ள Perplexity AI Pro, ஏர்டெல்லின் 360 மில்லியன் சந்தாதாரர்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது.
இலவச சலுகை ஏர்டெல் ப்ரீபெய்ட் மற்றும் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக நாம் Perplexity Pro AI சந்தா பெற வேண்டும் என்றால் ஓராண்டுக்கு 17,000 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆனால் ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் அடுத்த ஓராண்டு காலத்திற்கு Perplexity Pro AI வசதியை கட்டணமே இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். இது முழுக்க முழுக்க இலவசம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பயனாளிகளுக்கு என்ன லாபம்?
ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்கள், வைஃபை பயன்படுத்துபவர்கள் மற்றும் டிடிஎச் வாடிக்கையாளர்கள் என அனைவருமே அடுத்த 12 மாதத்திற்கு இலவசமாக Perplexity Pro AI வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
படங்களை உருவாக்குவது, ஒரு குறிப்பிட்ட பைலை அப்லோடு செய்துவிட்டு அதனை பகுப்பாய்வு செய்து வழங்க செய்வது, நம்முடைய மெயில்களை படித்து காட்டுவது, ஆய்வுகளுக்கு தரவுகளை வழங்குவது என Perplexity Pro AI என்பது பல்வேறு நவீன ஏஐ வசதிகளை வழங்க கூடியதாக இருக்கிறது.
குறித்த சந்தாவை பெற ஏர்டெல் வாடிக்கையாளர்கள் “Airtel Thanks” செயலியில் செல்ல வேண்டும். அங்கு தங்கள் கணக்கில் லாகின் செய்து, "Rewards" பகுதியை கிளிக் செய்தாலே Perplexity Pro சந்தாவை செயல்படுத்த முடியும்.
Perplexity AI என்பது 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒரு செயலி ஆகும்.
வழக்கமாக நாம் google தேடு பொறியில் தேடக்கூடிய விஷயங்கள் போல இல்லாமல் இதில் நாம் கேட்கும் கேள்விகளுக்கு மிகத் துல்லியமான பதில்கள் கிடைக்கும். எனவே தான் பாரம்பரிய தேடு பொறிகளில் இருந்து மக்கள் தற்போது இது போன்ற ஏஐ அடிப்படையிலான தேடு பொறிகளுக்கு மாறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |