ஐபிஎல் 2022; அகமதாபாத் அணியின் புதிய பெயர் அறிவிப்பு!
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தொடரின் ஏலம் வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறுகிறது.
ஏற்கனவே ஒவ்வொரு அணியும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தனர். மற்ற வீரர்களை ஏலத்தின் மூலம் எடுப்பார்கள் என தெரிகிறது.
இதனிடையில் புதிதாக இணைந்துள்ள 2 அணிகளான அகமதாபாத், லக்னோ அணிகளின் தக்க வீரர்களையும், கேப்டன்களை அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் லக்னோ அணிக்கு லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் என பெயர் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அகமதாபாத் அணிக்கு அகமதாபாத் டைட்டன்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
ஆனாலும் அந்த அணியின் நிர்வாகம் இதுகுறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. தற்போது அகமதாபாத் அணிக்கு ‘குஜராத் டைட்டன்ஸ்’ (Gujarat Titans) என பெயர் வைத்து இன்று அதிகாரப்பூர்வமாக் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அணிக்கு கேப்டனாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
Gujarat Titans will be the name of the IPL based franchise from Ahmedabad.
— Johns. (@CricCrazyJohns) February 9, 2022