ஏ சாமி நீ தான்.. 6800 மாணவர்களின் கனவு கோட்டை அகரம்- அரங்கத்தில் பாட்டியின் அழுகுரல்
160 மாணவர்கள் முதல் ஆரம்பித்த அகரம் பவுண்டேஷன் மூலம் வளர்ந்து வந்த மாணவர்களின் தாய்மார்கள் கதறி அழும் காட்சி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
அகரம்
அகரம் பவுண்டேஷன் (Agaram Foundation) என்ற நிறுவனத்தை மாணவர்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்ற நோக்கில் நடிகர் சூர்யா ஆரம்பித்துள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு 160 மாணவர்களுடன் இந்த நிறுவனம் செயல்பட ஆரம்பித்துள்ளது.

Neeya Naana: காலையில் வைக்கும் சாதம் இரவு வரை கெட்டுப்போகாமல் இருக்குமா? அரங்கத்தில் பெண் கூறிய டிப்ஸ்
நாம் காணாத சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதே இவர்களின் நோக்கமாக இருந்தது.
அகரம் பவுண்டேஷனின் புதிய அலுவலகம் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அ திறப்பு விழாவில், மாணவர்கள் "கல்வியே எங்கள் ஆயுதம்" என்று உறுதிமொழி ஏற்றனர்.
கைக் கூப்பி நன்றி கூறிய பாட்டி
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் நடிகர் சூர்யா செய்த உதவியால் சாதனை படைத்தவர்கள் அகரம் பவுண்டேஷனின் 15ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

Super Singer: கையில் கட்டுடன் சூப்பர் சிங்கர் மேடையில் பாடகி சித்ரா... ஆரம்பத்திலேயே வெளிநடப்பு செய்த நடுவர்
அத்துடன் மாணவர்கள் பட்ட கஷ்டங்கள், கிடைத்த பலன்கள், கண்டுபிடிப்புக்கள் உள்ளிட்ட அனைத்தையும் மாணவர்கள் கண்ணீருடன் பகிர்ந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அகரம்- சூர்யா கல்வியே ஆயுதம் என்ற நிகழ்ச்சியில் மாணவர்களின் வெற்றி அதில் அகரம் பவுண்டேஷன் செய்த உதவிகள் தொடர்பாக பேசப்பட்டது.
அதில் பேசிய பாட்டி,“ இருக்க வீடு இல்லாமல் இருந்தோம். தற்போது என்னுடைய மகள் பெரிய நிறுவனம் ஒன்றில் குழு தலைவராக இருக்கிறார். இவை அனைத்தும் அகரம் கொடுத்து தான். ரூ. 100 கூலி வாங்கிய என்னுடைய வீட்டை வந்து பாருங்கள்..” என பேசியதுடன் “ஏ சாமியை காப்பாற்றியது நீங்கள் தான். நான் இறக்கும் வரை இதனை மறக்கமாட்டேன்..” என கண்ணீருடன் பேசியிருக்கிறார்.
இப்படியாக நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
