Neeya Naana: காலையில் வைக்கும் சாதம் இரவு வரை கெட்டுப்போகாமல் இருக்குமா? அரங்கத்தில் பெண் கூறிய டிப்ஸ்
நீயா நானா நிகழ்ச்சியில் வேலைக்கு செல்லும் மாமியார் மற்றும் வீட்டில் இருக்கும் மருமகள் என்ற தலைப்பில் விவாதமாக மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் வேலைக்கு செல்லும் மாமியார் மற்றும் வீட்டில் இருக்கும் மருமகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாமியார் வேலைக்கு செல்வதால் வீட்டில் மருமகள் மிகவும் ஜாலியாக இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் ஒரு சிலர் தனக்கு தேவைப்படும் பொருள் வாங்குவதற்கு அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் மாமியார் ஒருவர் தான் குழந்தையை வைத்துக்கொண்டு வேலை சென்ற விதத்தையும், மற்றொருவர் குக்கரில் சாதம் வைத்தால் இரவு வரை இருந்தாலும் கெட்டுப்போகாது என்று புதிய விடயத்தினைக் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |