மதிய நேரம் குட்டித் தூக்கம் நல்லதா?
தூக்கம் என்பது அனைவருக்குமே முக்கியமான ஒன்று. சிலர் மத்தியானம், இரவு என்று பாராமல் நன்றாக உறங்குவார்கள். சிலருக்கு பகல் வேளையில் உறங்குவது என்பது கட்டாயமான ஒன்றாகக் காணப்படுகிறது.
மதிய நேரத்தில் சிறிய தூக்கம் என்பது நமது மனதை நிம்மதியாக்குவதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது. தூக்கத்துக்கு, பவர் கேப், கேட் தூக்கம், சியெஸ்டா என பல வகைகள் உள்ளது.
இந்த பவர் நேப் எனப்படுவது, தூக்கம் அல்ல, அது புத்துணர்வைப் பெறுவதற்கான ஒரு பயிற்சி. ஒரு சில நிறுவனங்களில் இந்த பவர் நேப் முறையை செயற்படுத்துகின்றனர்.
காரணம், பணியாளர்கள் வேலைக்கு நடுவில் குட்டித் தூக்கம் போடுவது, நமது மூளையை கூர்மையாகவும் விழிப்புணர்வுடனும் வைத்திருக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
இதேபோல் கேட் தூக்கம் என்பது சிறிது நேரம் ஓய்வெடுப்பது என்பதாகும். பூனை எவ்வாறு கண் மூடியிருந்தாலும் விழிப்புணர்வுடன் இருக்கின்றதோ அதைப் போன்றே ஆழ்ந்த தூக்கத்துக்கு செல்லாமல் சிறிது மனதை புத்துணர்ச்சியாக்கக் கூடிய விடயமொன்றாகும்.
இதேபோன்றுதான் சியெஸ்டா என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எனவே மத்தியான நேர உறக்கம் என்பது உடலுக்கு கேடு என்பதை விட குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு தூங்கினால் நிச்சயம் உடலை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க முடியும் என்கின்றனர்.
image - sleep foundation