தனது எஜமானியை காப்பாற்ற உதவி கேட்டு துடித்த நாய்: வைரலாகும் வீடியோ காட்சி
வளர்ப்பு நாய் ஒன்று தன்னை வளர்தவர்கள் விபத்தில் சிக்கி இருப்பதை அறிந்து அவர்களை காப்பாற்ற தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
சாலையின் அருகே சென்று கொண்டிருந்த கார் திடீரென விபத்துக்குள்ளாகியதால் அந்த காரில் இருந்த நாய்குட்டி ஜன்னல் வழியால் குதித்து அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளது.
காரில் இருந்து குதித்த நாய்க்குட்டி டேகேர் சென்டர் ஒன்றின் முன் நின்று கொண்டு உள்ளே இருக்கும் ஊழியர்களின் கவனத்தை ஈர்க்க கீழே படுத்து அதற்கு தெரிந்தவாறு முயற்சிக்கின்றது.
இந்த நாய்க்குட்டி செய்த இந்த மெய்சிலிர்க்கும் செயல் சிசிடிவி காட்சிகள் மூலம் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.