எலிமினேட்டான தர்ஷிகா காதலரை பார்த்து கடைசியாக கூறிய வார்த்தை- மெய்சிலிர்த்த ரசிகர்கள்
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய தர்ஷிகா அவருடைய காதலரான VJ விஷாலை பார்த்து பகிர்ந்து கொண்ட விடயம் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பிக்பாஸ்
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
இதுவரையில், நடந்த எவிக்ஷன்களில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, சிவக்குமார்,சாச்சனா, ஆனந்தி, தர்ஷிகா, சத்யா ஆகிய 12 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
இன்னும் ஒரு மாதத்தில் நிகழ்ச்சி நிறைவடையவுள்ளதால் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த 7 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை கண்டுள்ளது.
இதற்கு போட்டியாளர்களுடன் இணைந்து பிக்பாஸ் ஊழியர்களும் தான் என தகவல்கள் கூறுகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 20 போட்டியாளர்களை வைத்து நடத்தப்பட்டாலும் அவர்களை கண்காணிக்கு நூற்றுக்கணக்கான கேமராக்கள் உள்ளே வைக்கப்பட்டுள்ளன.
கப்போட வா..
இந்த நிலையில், இன்றைய எபிசோடில் விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளராக காப்பாற்றிய நிலையில் இறுதியாக கார்டை எடுத்து காட்டி தர்ஷிகா தான் எலிமினேஷன் என அறிவித்தார்.
தர்ஷிகா அதை எதிர்பார்த்தது போலவே சிரித்து கொண்டே தான் இருந்தார். எல்லோரிடமும் விடை பெற்று கொண்ட தர்ஷிகா VJ விஷாலை கட்டிப்பிடித்து உணர்வுபூர்வமாக பேச ஆரம்பித்தார்.
அப்போது "விதி நமக்காக என்ன திட்டம் வைத்திருக்கிறது என தெரியவில்லை. இந்த நினைவுகள் ரொம்ப நன்றாக இருந்தது. டைட்டிலோட வா" என கூறிவிட்டு கிளம்பினார்.
இந்த சம்பவம் ரசிகர்களை ஈர்த்துள்ளதுடன், விஷாலின் வெற்றிக்காக வெளியில் ஒருவர் இருக்கிறார் என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |