சாப்பிட்ட பின்பு இந்த தவறுகளை தவறியும் செய்யாதீங்க... பாரிய விளைவை ஏற்படுத்துமாம்
சாப்பிட்ட பின்பு செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சாப்பிட்ட பின்பு இதை செய்யாதீங்க
சாப்பிடுவதற்கு முன்போ, சாப்பிட்ட பின்போ தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் சரியான அளவில் உணவை சாப்பிட முடியாது. சாப்பிட்டு முடித்து 30 நிமிடத்திற்கு பின்பு தண்ணீர் குடிக்கலாம்.
சாப்பிட்ட உடனே தூங்கும் பழக்கம் இருந்தால் அதனை தவிர்த்து விடவும். ஏனெனில் இவை செரிமானத்தில் பிரச்சினை ஏற்படுத்தும். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து தூங்கலாம்.
உங்களுக்கு சாப்பிட்ட பின்பு குளிக்கும் பழக்கம் இருந்தால் உடனே நிறுத்தவும். குறைந்தது 2 மணி நேரம் கழித்து தான் குளிக்க வேண்டும்.
சாப்பிட்ட உடனே புகைப்பிடித்தல் கூடவே கூடாது. இவை செரிமானத்தில் பிரச்சினை ஏற்படுவதுடன், வயிறு மற்றும் குடல் பிரச்சினைக்கும் வழிவகுக்கும். மேலும் இது 10 சிகரெட் குடிப்பதற்கு சமமாம்.
சாப்பிட்ட உடனே டீ காபி குடித்தால், அதிலுள்ள சில அமிலங்கள் உணவு புரதங்களை உறிஞ்சுவதில் தலையிடும்.
சாப்பிட்ட உடனே மது அருந்தும் பழக்கம் இருந்தால் உடனே நிறுத்திக் கொள்ளவும். ஏனெனில் இவை உடல் ஆரோக்கியத்தில் பாதகமான பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பல உடல்நலக் கோளாறுகளையும் ஏற்படுத்தும்.
சாப்பிட்ட உடனே ஜாகிங் செல்வதை தவிர்க்கவும். ஜாகிங் சென்றால் உடலின் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிப்பதுடன், ரத்த ஓட்டமும் குறையுமாம்.
சாப்பிட்டு முடித்த பின்பு உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவும். அதாவது குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் கழித்து உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |