சாப்பிட்டதும் காபி குடிக்கும் பழக்கம் இருக்கா? ஆபத்து ஏற்படும் ஜாக்கிரதை
சாப்பிட்ட உடனே காபி குடிப்பது என்ன மாதிரியான பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காபி
பொதுவாக காபி குப்பதால் உடல் மற்றும் மனதிற்கு சுறுசுறுப்பை ஏற்படுத்தும் என்பதால் காலையில் முதலாவதாக காபியை பருகி வருகின்றனர்.
காலையில் காபி குடித்தால் நன்மை ஏற்பட்டாலும், சிலர் சாப்பிட்ட உடனேயே காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
காபி மீது தீராத காதல் கொண்டவர்கள் பலரது செயல் சாப்பிட்ட உடனே காபி குடிப்பதாகும். அவ்வாறு சாப்பிட்டு முடித்த பின்பு காபி எடுத்துக் கொள்வது சரியா என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
ஏற்படும் ஆபத்துக்கள்
சாப்பிட்ட உடனே காபி பருகுவதால் உணவிலுள்ள இரும்புச்சத்து உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகின்றது. மேலும் செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டுவிடும்.
சாப்பிட்ட உடனே காபி குடிப்பது மன அழுத்தத்தை குறைத்து ரிலாக்ஷாக உணர வைக்கும் என்றாலும் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்துவிடும். இதனால் சில தருணங்களில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்படும்.
image: Getty
இரவில் காபி குடிப்பது நல்லதா?
சாப்பிட்ட பின்பு, இரவில் தூங்கும் முன்பு காபி குடிப்பது பற்களில் துவாரங்களை ஏற்படுத்தும். இதனால் பல்வலி, பல் கூச்சம் பிரச்சனை ஏற்படும்.
சாப்பிட்டதும் காபி குடிப்பதால் இரைப்பை அமிலத்தை அதிகரிக்கச் செய்வதுடன், வயிற்றுப்போக்கு, அமில ரிஃப்ளக்ஸ் போன்ற பிரச்சனையை ஏற்படுத்திவிடும். மலம் கழிப்பதிலும் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
தூக்கத்தில் பிரச்சனை ஏற்படும். ஏனெனில் காஃபின் சில தருணங்களில் மூளைக்கு செல்லும் சிக்னல்களை தடுத்து விடுகின்றது. இதனால் தூக்கமின்மை, தூக்க சுழற்சியில் சிக்கல்களும் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
![Best Time To Walk: வழக்கத்திற்கு மாறாக நடைபயிற்சி தரும் 9 வகையான பலன்கள்](https://cdn.ibcstack.com/article/013b8bf4-6fb9-4dfe-acb9-524ef902d474/25-67b420d874b14-md.webp)