முன்னாள் மனைவி ஆசையை உடனே நிறைவேற்றிய ஜிவி
ஜிவி பிரகாஷ், தன்னுடைய முன்னாள் மனைவியான சைந்தவி ஆசைப்பட்டு கேட்டதை நாகரிகமாக மேடையில் நிறைவேற்றிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஜிவி பிரகாஷ்- சைந்தவி
நடிகராகவும் இசையமைப்பாளராகவும் பிரபலமானவர் தான் ஜிவி பிரகாஷ்.
இவர், கடந்த வருடம் அவருடைய காதல் மனைவி சைந்தவியை விவாகரத்து செய்துள்ளார்.

Neeya Naana: காலையில் வைக்கும் சாதம் இரவு வரை கெட்டுப்போகாமல் இருக்குமா? அரங்கத்தில் பெண் கூறிய டிப்ஸ்
இதற்கான காரணத்தை இருவரும் கூறவில்லை. பிரிந்தாலும் வேலை என வரும் பொழுது இருவரும் சேர்ந்து தான் இருக்கிறார்கள்.
இருந்த போதிலும் ஜிவி பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்து கொள்ள நடிகை திவ்யா பாரதி தான் காரணம் என பலரும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வந்தனர். இந்த வதந்திக்கு முதல் முறையாக ஜிவி பிரகாஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது, பொதுவாக பிரபலங்கள் எனும் வரும் பொழுது வதந்திகளுக்கு பஞ்சமே இருக்காது. அந்த வரிசையில் கடந்த வருடம் தங்களின் விவாகரத்தை அறிவித்த ஜிவி பிரகாஷ்- சைந்தவி இருவரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் இருவரும் அமைதியாக இருந்து, இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் பிரிந்து கொள்கிறோம், ஆனால் நாங்கள் நண்பர்களாக எங்கள் வாழ்க்கையில் தொடர்வோம்..” எனக் குறிப்பிட்டு அறிக்கையொன்றை பகிர்ந்தனர்.
மீண்டும் படத்தில் இணைய என்ன காரணம்?
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ்- சைந்தவி இருவரும் சிறந்த நண்பர்களாக சில நிகழ்வுகளில் ஜோடியாக கலந்து கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில், அப்படி கலந்து கொண்ட நிகழ்வில் சைந்தவி பாட வரும் பொழுது அதற்கு “சரி” எனக் கூறி, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அத்துடன் நிறுத்தாமல் சைந்தவி பாடும் பொழுது, அதற்கு எதிர் பாட்டும் ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார். இவர்களுக்கு இருக்கும் மரியாதை மற்றும் காதலை பார்த்து முழு அரங்கமே கத்த ஆரம்பித்தது.
இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. காணொளியை பார்த்த இணையவாசிகள், இவர்களுக்கு இருக்கும் மதிப்பை பாராட்டும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |