இதல்லவோ ரிவன்ஜ்.. விவாகரத்து சர்ச்சைக்கு பின் பழைய நிலைக்கு திரும்பிய ஆர்த்தி
விவாகரத்து சர்ச்சைக்கு பின் பழைய நிலைக்கு திரும்பிய ஆர்த்தி ரவியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
விவாகரத்து
தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானாவர் தான் நடிகர் ரவி மோகன்.
இந்த திரைப்பட வெற்றிக்கு பின்னர், ரவி தன்னுடைய பெயரை ஜெயம் ரவி என மாற்றிக் கொண்டார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் ரவி மோகன் என்று பெயர் மாற்றம் செய்திருந்தார்.
கடந்த வருடம் அவருடைய குடும்ப பிரச்சினைகள் ஊடகங்களுக்கு வர ஆரம்பித்தது.
அதாவது காதலித்து திருமணம் செய்த ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாகவும், குடும்பத்திற்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் நடப்பதாகவும் அறிக்கையொன்றை பகிர்ந்தார். அன்று முதல் இன்று வரை சமூக வலைத்தளங்களில் ரவிமோகன் பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
தாய், தந்தையாக இருவரும் சேர்ந்து செய்த விஷயம்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரவிமோகன் - ஆர்த்தி இருவரும் விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் மகன்களுக்காக போட்ட பதிவு இணையவாசிகள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
அதாவது, ரவிமோகனின் மூத்த மகன் ஆரவ் நேற்றை தினம் அவருடைய பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார். இந்த தினத்தை கொண்டாடும் வகையில், பெற்றோர்களான ரவி- ஆர்த்தி இருவரும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து மகனுக்கு வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் கொடுத்திருந்தனர்.
ஆர்த்தி போட்ட பதிவு
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி ரவி தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அத்துடன் “இதயத்தில் ஏதோ ஒன்று..” எனக் குறிப்பிட்டு, தன்னுடைய மனம் அமைதியாக இருப்பதற்கான காரணத்தையும் விளக்கமாக கூறியுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்,“ ஆர்த்தியின் கம்பேக் இதுதானா?” என ஆதரவான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இனி வரும் காலங்களில் விவாகரத்திற்கு பின்னர் துவண்டு வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இதுவொரு முன்மாதிரியாக இருக்கும் என இணையவாசிகள் முனுமுனுக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |