12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் குரு மங்கள யோகம்: அதிர்ஷ்டத்டதை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளிலும் குறிப்பிட அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு கிரக மாற்றங்கள் நிகழும் போது சில ராசிகளுக்கு அதிர்ஷடம் கிடைக்கு அதே வேளை குறிப்பிட்ட சில ராசயினர் பாதக தாக்கத்தையும் எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம்.
அந்த வகையில் எதிர்வரும் ஜூலை 12-ம் திகதி செவ்வாய் கிரகமானது தற்போது வியாழன் இருக்கும் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சியடைய போகின்றது. அதனால் குருவும், செவ்வாயும் 12 ஆண்டுகளின் பின்னர் ரிஷபத்தில் இணையப்போகின்றார்கள்.
வியாழனும் செவ்வாயும் ஒரே ராசியில் இணைவதால் குரு மங்கள யோகம் ஏற்படுடப்போகின்றது. அதனால் குறிப்பிட்ட சில ராசியினருக்கு வாழ்வில் பொற்காலம் ஆரம்பமாகப்போகின்றது. அப்படி அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு குரு மங்கள யோகம் வாழ்வில் பல்வேறு விதத்திலும் அதிர்ஷ்டத்தை பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கம். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு சரியாக நேரத்தை எதிர்ப்பார்த்து இருப்பவர்களுக்கு இத தான் பொன்னான நேரம் சொல்லாம்.
எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியடையும் வாய்ப்பு காணப்படுகின்றது. பணப்பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து நிதிநிலை சீராகும்.
கன்னி
வியாழனும் செவ்வாயும் இணையும் இந்த குரு மங்கள யோகம் கன்னி ராசியினருக்கு மாபெரும் வெற்றியை கொடுக்கும். இந்த காலகட்டத்தில் இவர்களுக்கு தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும்.
குடும்பத்தில் நீண்ட நாள் இருந்துவந்து பிரச்சினைகளுக்கு தீர்வு பிறக்கும் நிதி நிலையில் உச்சத்தை தொடும் வாய்ப்புகள் தேடிவரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினக்கு இந்த குரு மங்கள யோகம் நிதி ரீதியில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு வாய்ப்பு தேடிவரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வி்டயங்களில் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பணவரவுகள் சீரான இருக்கும்.
தனுசு
வியாழன் மற்றும் செவ்வாய் இணையும் இந்த குரு மங்கள யோகம் தனுசு ராசியினருக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் கொடுப்பதாக அமையும்.
இந்த காலகட்டத்தில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். அரசாங்கத்திடமிருந்து உதவி கிடைக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றது.தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |