கிராம்பு மூலம் வீட்டின் வருமானத்தை அதிகரிக்கலாமா? தூங்கும் போது இதை செய்தால் போதும்
கிராம்பு உணவுக்கு வாசனை மற்றும் சுவையை கூட்டுவதை தாண்டி கிராம்பு பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் அமைகிறது.
கிராம்பு மரத்தின் உலர்ந்த பூக்களில் இருந்து பெறப்படும் கிராம்புகள் ஊட்டச்சத்து மதிப்பு நிறைந்த ஒரு மசாலா பொருளாக காணப்படுகின்றது.
வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் கிராம்பு வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் பல்வேறு நன்மைகளை கொடுக்கக்கூடியது. அதனை வீட்டில் எந்த இடத்தில் வைத்தால் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வருமானத்தை அதிகரிக்க முடியுமா?
பொதுவாகவே எதிர்மறை மற்றும் நேர்மறை ஆற்றல்கள் நம்மை சுற்றி இருந்துக்கொண்டே இருக்கும். நாம் இருக்கும் இடத்தில் எதிர்மறை ஆற்றல்களை அதிகமாக ஈர்க்கக்கூடிய பொருட்கள் இருந்தால் அது வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளும் துன்பங்களும் ஏற்பட காரணமாக அமையும்.
அப்படி வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை அழித்து நேர்மறை சக்திகளை ஈர்க்கும் தன்மை கிராம்புக்கு இயற்கையாகவே இருக்கின்றது.
வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் இரண்டு கிராம்புகளை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் வாழ்வில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.
மேலும் இரவில் கெட்ட கனவுகள் ஏற்படுவதை தவிர்க்கவும் இந்த முறையை பின்பற்றுவது பெரிதும் துணைப்புரியும்.. கிராம்புகளை தலையணைக்கு அடியில் வைத்து தூங்குவதால் தொழில் ரீதியிலும் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். பணத்தை ஈர்கும் ஆற்றலும் கிராம்புக்கு அதிகமாக இருக்கின்றது.
எனவே பணப்பிரச்சினைக்கும் இது தீர்வு கொடுக்கும்.மன அழுத்தம் காரணமாக தூங்க முடியாமல் தவித்தாலும், கிராம்பை தலையணைக்கு அடையில் வைத்து தூங்கும் போது நிம்மதியான தூக்கம் கிடைக்கின்றது. இதனை தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் நிதி ரீதியில் பாரிய வளர்ச்சி உண்டாகும் என்பது ஐதீகம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |