வியாழனுடன் கடகத்தில் குரு - டபுள் ஜாக்பட் எந்த ராசிகளுக்கு தெரியுமா?
ஜோதிடத்தின் படி பல ராஜ யோகங்கள் உருவாகும். அதில் எது சிறப்பு வாய்ந்ததோ அதே அளவிற்கு அது பல ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
இந்த வருட பஞ்சாங்கத்தின்படி, தந்தேராஸ் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த நாளில் குரு மிதுன ராசியிலிருந்து வெளியேறி கடக ராசிக்குள் நுழைகிறார்.
கடகம் குருவின் உயர்ந்த ராசியாகும். ஜோதிடத்தில் குருவின் கடக ராசிப் பெயர்ச்சி மங்களகரமானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
அதிலும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடக ராசிக்குள் நுழைகிறார். இது ஒரு கேந்திர திரிகோண யோகத்தை உருவாக்கும். இதனால் சில ராசியினர் லட்சுமி தேவி மற்றும் குபேரனால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். இதனால் செல்வத்திற்கு இந்த மூன்று ராசிக்கும் குறை இருக்காது.
கடக ராசி | கடக ராசியில் பிறந்தவர்களுக்கு தந்தேராஸ் பண்டிகை மிகவும் புனிதமானது. லட்சுமி தேவி வாழ்கையில் செல்வத்தை அதிகரிப்பார். உங்கள் நிதி ஆதாயங்கள் உச்சத்திற்கு செல்லும். திடீரென புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். செய்யும் தொழில் முன்னேற்றம் கிடைக்கும். பணத்தின் வருமானத்திற்கு எந்த பஞ்சமும் இருக்காது. இதுவரை திட்டம் போட்ட விடயங்கள் நடக்காமல் இருந்தால் அது நிறைவேறும். |
துலாம் | துலாம் ராசிக்கு குரு பெயர்ச்சி அடைவது மிகவும் நன்மை தரும். குடும்பம் மற்றும் வீடு தொடர்பான விஷயங்களில் வளர்ச்சியை நாடுபவர்களுக்கு இந்த நேரம் சிறந்ததாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதாக இருந்தால் இந்த காலகட்டத்தில் நிறைவேறும். நீங்கள் ஏதாவது ஒரு விடயத்திற்காக பல கஷ்டப்பட்டிருப்பீர்கள். அதற்கு ஒரு நல்ல பலனை குரு பகவான் கொண்டு வருவார். நிதியில் உங்களுக்கு வரும் முன்னேற்றம் வாழ்கையில் நிலையாக மாறும். |
விருச்சிகம் | விருச்சிக ராசிக்காரர்களுக்கு தந்தேராஸ் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கேந்திர திரிகோண யோகத்தின் அருளால், அவர்களின் வருமானம் அதிகரிக்கும். பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தங்கம் வாங்குவது அவர்களுக்கு நன்மை பயக்கும். குரு பகவான் செல்வத்தை அள்ளி கொடுக்க போகிறார். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).