தெருவில் சமோசா விற்கும் பிரபல டிவி தொகுப்பாளர் - காரணம் என்ன? வைரல் புகைப்படம்!
ஆப்கான் டிவி நெறியாளர் வேலையின்றி தெருவோரம் சமோசா விற்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை கைப்பறியது முதல் அந்த நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால் பலரும் வேலையின்றி வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆப்கான் நாட்டைச் சேர்ந்த பல தொலைக்காட்சிகளில் டிவி தொகுப்பாளராகப் பணியாற்றி வந்த மெளாசா முகம்மாதி என்பவர், வேலைவாய்ப்பை இழந்து தற்போது வருமானம் இன்றி சமோசா விற்கிறார்.

மேலும், இந்த புகைப்படம் வைரலாக பரவியதை அடுத்து, ஆப்கான் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் ஜெனரல் அகமதுதுல்லா வாஷிக், மெளசா முக்கமாதிக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார்.