விமானத்தில் பயணிக்கையில் மூக்கில் ரத்தம் வருவது ஏன்? பலரும் அறியாத உண்மை
விமானத்தில் பயணம் செய்யும் போது சிலரது மூக்கிலிருந்து ரத்தம் வருவது ஏன் என்ற காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
விமான பயணம்
நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு விமானத்தில் பயணம் செய்வது என்பது நீண்ட நாள் கனவாகவே இருந்து வருகின்றது. நடுத்தர குடும்பங்கள் வானத்தில் செல்லும் விமானத்தை தரையில் இருந்து பார்த்து மகிழ்ச்சி கொள்வார்கள்.
இவர்களின் கனவு என்றைக்காவது உண்மையாகும் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கும். ஆனால் விமானத்தில் பயணம் செய்வதும் சாதாரண காரியமல்ல.
அதற்கு நமது உடலும் ஒத்துழைக்க வேண்டுமாம். ஆம் விமான பயணத்தின் போது சில நபர்களுக்கு மூக்கிலிருந்து ரத்தம் வழியும் நிலை ஏற்படுகின்றது. இது எதனால் ஏற்படுகின்றது என்பதை தற்போது தெரிந்து கொள்வோம்.
மூக்கில் ரத்தம் வருவது ஏன்?
விமான பயணத்தின் போது இவ்வாறு மூக்கில் ரத்தம் கசிவது, வைரஸ் தொற்று மற்றும் அதிக உயரத்தின் கலவையாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
சிலருக்கு உயரம் பிடிக்காமல் இருக்கும்... உடலில் அழுத்தம் அதிகமாகும்.. அதிக உயரத்தில் பயணிப்பது மனித உடலில் அழுத்தத்தினை அதிகரிப்பதால் இவ்வாறு மூக்கில் ரத்தம் கசியும் ஏற்படுகின்றதாம்.
பயணிகள் ஆரோக்கியம், உயரமான இடங்களுக்கு செல்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.
மேலும் தற்போது இருக்கும் விமானம் உயரே பறக்கும் போது அழுத்தம் குறைவாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், முன்பை விட தற்போது இந்த பிரச்சினை அதிகமாக ஏற்படுவது இல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |